பிரம்ம புராணம் - 3

 



உலகின் அழிவைக் கண்டு கலங்கிய சந்திரன் ஒரு அழகிய பெண்ணுடன் பிரசேத சகோதரர்களிடம் வந்து, "நீங்கள் சினம் கொள்வதில் நியாயமில்லை.உலகை ஆள வேண்டிய நீங்கள் அதைத் துறந்து விட்டதால்,இந்நிலை உருவாயிற்று.இப்போது உலகை ஆள ஒரு மன்னன் தேவை.இந்தப் பெண்ணை மணந்து அவள் மூலம் பிறக்கும் மகனை அரசனாக்கினால் உலகம் செழிக்கும்.நீங்களும் இடையூறு இல்லாமல் தவத்தை மேற் கொள்ளலாம்  " என்று கூறினார்.பிரசேதர்கள் அதற்கு உடன்பட்டு அவளை மணந்து தட்சன் எனும் பிள்ளையைப் பெற்றனர்.அவனே உலகுக்கு அரசனானான்.மக்களுக்கு "பிரஜை" என்ற பெயருண்டு.அவர்களுக்கு அரசனான தட்சன் பிரஜாபதி என அழைக்கப் பட்டான். என்று உரோமஹர்ஷனர் சொல்லிக் கொண்டிருந்த போது..முனிவர்கள் குறுக்கிட்டனர்..


"பெருமுனிவரே! தட்சன் என்பவன் பிரம்மனின் கால் கட்டை விரலில் இருந்து தோன்றியவன் ..என்றல்லவா..கேள்விப் பட்டோம். ஆனால், பிரசேதர்களின் மக்ன தட்சன் என்றால்..குழப்பமாய் இருக்கின்றதே!" என்றனர்.


"இதில் குழப்பம் ஏதுமில்லை.எத்தனையோ தட்சன்கள் தோன்றியுள்ளனர்...அவர்களில் ஒரு தட்சன் நான்முகனின் கட்டைவிரலில் இருந்து தோன்றினான்.இந்த தட்சன் பிரசேதர்களின் மகனாகத் தோன்றினான்"என்றார்.


தட்சன், அசிக்கிளி என்பவளை மணந்து ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றனர்...இவர்கள் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முனைந்த போது, நாரதர் அங்கு வந்து,"உலகம் எப்படிப்பட்டது.அதன் பூகோள அமைப்பு எப்படி?என்றெல்லாம் அறிந்து கொள்ளாது நீங்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பது தவறு.எல்லோரும் சென்று உலகம் முழுதும் சுற்றிப் பார்த்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம்" என்றார்.


தட்சனின் மைந்தர்கள் உலகை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர்.ஆனால்..அவர்கள் திரும்பவில்லை.தட்சன் மீண்டும் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான்.அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முற்பட்டபோது மீண்டும் நாரதர் வந்து மூத்த சகோதரர்களுக்கு சொன்னதைப் போலச் சொன்னார்.அப்படியே இவர்களும் சென்று காணாமல் போயினர்.


இதனால் தட்சன்,நாரதர் மீது கோபப்பட்டு அவரைக் கொல்ல முயற்சிக்கையில், பிரம்மா குறுக்கிட்டார்."நாரதரைக் கொல்லாமல் இருக்க வேண்டுமாயின், அத்ற்காக சில வரைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்"என்றான் தட்சன்.அதன்படி தட்சனின் பெண்களில் ஒருத்தியை பிரம்மா மணந்து கொள்ள வேண்டும்.அவள் வயிற்றில் நாரதர் வந்து பிறக்க வேண்டும் என்பதாகும்.


தட்சனுக்கு 60 பெண்கள் இருந்தனர்.அவர்களில் 27 பெண்களை சோமன் எனும் சந்திரனும்,பத்து பெண்களை தருமதேவதையும், எஞ்சிய பெண்களை ஆங்கிரசா முதலிய முனிவர்களும் மணம் புரிந்து கொண்டனர்.இவருள் பிரியா என்பவளை மட்டும் பிரம்மன் மணந்து கொண்டார்.


தருமதேவதையை மணந்த பத்து பெண்களில் அருந்ததிக்கு "உலகத்திலுள்ள பொருள்கள்'எனும் குழந்தைகளும், வசுவிற்கு "அஷட வசுக்கள்" என்ற எட்டு குழந்தைகளும் பிறந்தனர்.


அஷ்டவசுக்களில் ஒருவனான அனவன்  என்பவனுக்கு "குமரன்" எனும் மகன் பிறந்தான்.இந்த குமரன் என்ற பிள்ளையை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்..அதனால் அவன் "கார்த்திகேயன்" எனப் பெயர் பெற்றான்.


அஷ்டவசுக்களில் ஒருவனாகிய பிரபசாவிற்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான்.அவன் கட்டிடக்கலைகலைகளிலும்,ஆபரணங்கள் செய்வதிலும் தேர்ந்தவனாக விளங்கினான்.


சோமனை மணந்த 27 பெண்கள் 27 நட்சத்திரங்கள் ஆயினர்.

 

தட்சனின் எஞ்சிய பெண்களில் காசிப முனிவர் 13 பெண்களை மணந்தார்.அவருள் அதிதி என்பவளுக்கு 12 ஆதித்தர்களும், திதி என்பவளுக்கு ஹிரண்யன்.ஹிரண்யாக்க்ஷன் முதலிய அரக்கர்களும் அவர்களின் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி,வில்வலன்,மாரீச்சன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11