பிரம்மபுராணம் - 4


 


அர்ஷிதா என்ன பெண்ணிற்கு கந்தர்வர்கள் மக்களாகத் தோன்றினர்.சுரசா என்பவளுக்கு பாம்புகள் பிறந்தன.காஷா என்பவளுக்கு குபேரனுக்கு நண்பர்களாகிய யட்சர்கள் தோன்றினர்.சுரபியின் வயிற்றில் பசுக்களும்,எருமைகளும் தோன்றின.வினதாவிற்குப் பறவைகளின் அரசனாகிய கருடனும்,அருணையும் மக்களாகத் தோன்றினர்.தாமராவின் வழியில் ஆந்தைகள்,வல்லூறுகள்,காகங்கள்,குதிரைகள், கழுதைகள்,ஒட்டகங்கள் தோன்றின.குரோதவஷாவிற்கு 14000 பாம்புகள் பிறந்தன.இலா என்பவள் வயிற்றில் மரங்கள்,செடி கொடிகள் தோன்றின.கத்ரு என்பவள் வயிற்றில் அனந்தன்,வாசுகி,தட்சகன்,நகுசன் முதலிய நாகங்கள் தோன்றின.முனி என்ற பெண்ணிற்கு அப்சரஸ்கள் பெண்களாகத் தோன்றினர்.


அதிதியின் பிள்ளைகளாகிய தேவர்களும், திதியின் பிள்ளைகளாகிய அசுரர்களும் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருந்தனர்.பல அசுரரகள் தேவர்கள் தலைவனாகிய இந்திரனால் கொல்லப்பட்டனர்.இதனை அறிந்த திதி இந்திரனைக் கொல்ல தனக்கு ஒரு பிள்ளை வேண்டுமென வேண்டினாள்.அப்படி ஒரு பிள்ளை வேண்டுமானால் நூறாண்டுகள் அவள் கருவில் அப்பிள்ளை இருக்கும் என்றும்..அந்த நூறு ஆண்டுகளும் மிகக் க்டுமையான விரதங்கள் அனுஷ்டித்து கடுந்தவம் புரிய வேண்டும் என்றும் காசியபர் கூறினார்..திதியும் அப்படியே செய்வதாகக் கூறினாள்.விரதம் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆயின.அவள் வயிற்றில் தனனைக் கொல்ல ஒரு சிசு வளர்வதை அறிந்த இத்திரன், அதை அழிக்கக் காத்திருந்தான்.ஒருநாள் அனுஷ்டானங்களை முடித்த திதி கால்களைக் கழுவித் தூய்மை செய்து கொள்ளாமல் படுக்கச் சென்று படுக்கையில் விழுந்தாள்.


இந்த விரத பங்கத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இந்திரன், ஒரு அணுவடிவாக அவள் கால்களில் நுழைந்து, கருவில் இருக்கும் சிசுவை ஏழு துண்டுகளாக வெட்டினான்.


அந்த ஏழு துண்டுகளும் அழுதன.அழாதீர்கள் எனும் பொருளுடைய "மருத்" எனும் சொல்லை இந்திரன் மும்முறை கூறியும் அவற்றின் அழுகை ஓயவில்லை.இதனால் சினம் கொண்ட இந்திரன் ஒவ்வொரு துண்டத்தையும் எழு துண்டுகளாக வெட்டினான்.இப்போது 49 துண்டங்கள் ஆகிவிட்டன.இந்த நாற்பத்தொன்பதும் பிறந்தன."மருத்" என இந்திரன் அழைத்ததால் "மருத்துகள்" என்ற பெயரே இவர்களுக்கு வழங்கப்பட்டன.விரதபங்கம் ஆகிவிட்டபடியால் இந்த 49 மருத்துகளும் இந்திரனுக்குப் பகியயாகாது நண்பர்களாகினர்.


சுயம்பு மனுவின் மகனான உத்தானபாதனுக்கு மகனாவான் துருவன்.துருவன் பரம்பரையில் வந்தவன் அங்கா.நேர்மையானவனான அங்கா நல்ல முறையில் ஆட்சி செய்தாலும்..அவன் மனைவியாகிய சுனிதா தீயவனான மிருத்யுவின் மகளாவாள்.அவள் மகனான வெனா தகப்பனைப் போலில்லாது தீயவனாக விளங்கினான்.பாட்டன் மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ர அங்கங்காரம் கொண்டவனாக, இந்த அண்டங்களுக்கு எல்லாம் தானே தலைவன் என்று சொல்லித் திரிந்தான்.இவனை திருத்துவதற்காக மாரீச்சியின் தாலைமையில் பல முனிவர்கள் ஒன்று சேர்ந்து வந்து சொல்லியும் வெனா அவர்கள் அறிவுரைகளைக் கேட்கவில்லை.இதனால் சினம் கொண்ட அத்ரி என்ற முனிவர் வெனாவின் வலக்காலைப் பிடித்து முறுக்கினார்.மிகக் கொடியதும், பயங்கரமானதும், கரியதும் ஆன குள்ளன் ஒருவன் இக்காலின் வழியே வெளிப்பட்டான்.இந்த உருவத்தைக் கண்டு கலக்கமுற்ற அத்ரி "உட்கார்" எனும் பொருளுடைய "நிஷிதர்" என்று கூறினார்.அதனால் இந்தக் குள்ள்னைன் பரம்பரையினர் நிஷிதர்கள் என அழைக்கப் பட்டனர்.காலை முறுக்கியப் பிறகு இந்த முனிவர்கள் வெனாவின் கையை முறுக்கினர்.வெனாவின் தீமைகள் முழுதும் கால்வழி சென்று விட்டதால், அவனிடம் இருந்த நன்மைகள் கை வழியே ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு "பிருத்து"என்ற ஒருவன் வெளிப்பட்டான்.இவன் வெளிப்பட்டதும் வெனா இறந்து விட்டான்.  


ஒளியுடன் வெளிவந்த பிருத்துவை இப்பூமிக்கு அரசனாக்கி பிரம்மாவே முடி சூடினார்.பூமியிலுள்ள பொருள்களுக்கெல்லாம் யார்..யார்..தலைவன் என்றும் ,அதே நேரத்தில் அத்தலைமைப் பதவிகளையும் பிரம்மாவே பங்கீட்டுத் தந்தார்.அந்த பங்கீட்டின்படி மரம்,செடி, கொடிகள்,விண்மீன்கள்,கோள்கள், யாகங்கள்,தியானம்,வேதியர்களுக்குத் தலைவனாக சோமனை (சந்திரனை) நியமித்தார்.


வருணன்..கடலுக்கும்,குபேரன்..செல்வத்திற்கும்,அரக்கர்களுக்கும் தலைவனாக்கப்பட்டான்.பன்னிரெண்டு ஆதித்தியர்களுக்கும் தலைவனாக விஷ்ணுவும், அஷடவசுக்களுக்குத் தலைவனாக அக்னியும் நியமிக்கப் பட்டார்கள்.எல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவனாக தட்சனும்,49 மருத்துக்களுக்கும் தலைவனாக இந்திரனும்,தைத்திரியர்கள்,தானவர்கள் என்பவர்களின் தலைவனாக பிரகலாதனும் நியமிக்கப் பட்டனர்.


பிதுர்களுக்குத் தலைவனாக யமனும்,யட்சர்கள்,ராட்சதர்கள்.பிசாசுக்கள் ஆகியவற்றின் தலைவனாக சிவனும், மலைகளின் தலைவனாக இமவானும் நியமிக்கப்பட்டனர்.


நதிகளுக்குக் கடலும்,பாம்புகளுக்கு வாசுகியும்,கந்தர்வர்களுக்கு சித்ராதனும், பறவைகளுக்குக் கருடனும்,யானைகளுக்கு ஐராவதமும் தலைவர்களாக நியமிக்கப் பட்டனர்.


இதோடு நில்லாது நான்கு திசைகளுக்கும்நான்கு தலைவர்களை நியமித்தான். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11