பிரம்ம புராணம் - 5

பிருத்வி எனப் பெயர் வரக் காரணம்

--------------------------------

பிரம்மாவால் பங்கிட்டுத் தரப்பட்ட பூமிக்கு அரசனான பிருத்து நன்கு ஆட்சி செய்ததால், பூமியில் வளங்கள் கொழித்தன.பசுக்கள் பாலைப் பொழிந்தன.முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் யாகங்களைச் செய்தனர்.யாகத்தின் முடிவில் "சுதாக்கள்" என்றும் "மகதாக்கள்" என்றும் இரு கூட்டங்கள் தோன்றின.பிருத்துவின் புகழைப் பாடும்படி முனிவர்கள் இவர்களுக்குச் சொன்னார்கள்."ஆனால்..பிருத்து மிகவும் இளையவன்.இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளான்.இவன் இன்னும் ஏதும் வீரச்செயல் செய்யவில்லை.அவனை எப்படி புகழ்வது?" என சுதாக்களும்,மகதாக்களும் கேட்டனர்.முனிவர்கள் எதிகாலத்தை அறியும் ஆற்றலை இவர்களுக்கு வழங்க..உடன் பிருத்துவின் புகழை அவர்கள் பாடினர்.இப்பாடல்கள் எட்டுத் திக்கும் பரவின.இப்படி இருக்கும் பூமியில் வேறொரு மூலையில் இருந்து ஒரு சிலர் பிருத்துவைக் காண வந்தனர்.அவர்கள், பிருத்துவை நோக்கி, "அரசே! உன் புகழ் எட்டுத் திக்கும் பரவி..எதிரொலிக்கிறது.ஆனால், எங்கள் கஷ்டத்தை நீதான் போக்க வேண்டும்.பூமியில் ஒன்றும் விளைவதில்லை.வளமின்மையால் பசுக்கள் பால் தருவதில்லை.என்ன செய்வது?" என வினவினர்.இதைக் கேட்ட பிருத்து கோபத்துடன் வில்லை எடுத்துக் கொண்டு பூமியைப் பிளக்க புறப்பட்டான்.அஞ்சிய பூமி பசு வடிவெடுத்து ஓடி, மேலுலகம், கீழுலகம் சென்று எங்கும் புல் கிடைக்காமல் பிருத்துவின் எதிரே சென்று,"அரசே! பெண்ணாகிய என்னைக் கொல்வதால் உனக்கு ஒரு பயனும் இல்லை.பெண் கொலை என்ற பாவம்தான் மிஞ்சும்.அதற்கு பதிலாக இந்த பூமியை சமன் செய்.மலைகள் எல்லாம் ஒரு புறமாக ஒதுங்கி இருக்குமாறு செய்.சமதரையில் வேளாண்மை செய்தால் தேவையான வளங்கள் கிட்டும்"என்று கூறியது.பிருத்துவும் அப்படியே செய்தான்.மலைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டதால் சமதரை பெரிய அளவு கிடைத்ததால் வேளாண்மை வளம் பெற்றது.பூமியின் வளம் கொழித்தது.உயிர்கள் வாழ்விற்கு ஏற்றமாதிரி செய்த மன்னன் பெயரிலேயே பிருத்து என்பதே பூமிக்கு பெயராக .."பிருத்வி"என வழங்கலாயிற்று.


மன்வந்திரங்கள்

----------------------

இந்தப் பேரண்டத்தின் தோற்ரம், நிலையேறு,அழிவு என்பதைப் பற்றி பிரம்ம புராணம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்..


நான்கு யுகங்கள் அடங்கிய கால எல்லைக்கு "௳ன்வந்திரம்" என்று பெயர்.ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் அதிபதியாக இருப்பவர் "மனு".இந்த பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் இதுவரை சுவயம்புமனு மூலம் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர்.இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்கு தலைவர் "வைவஸ்த மனு" என்பதாகும்.

இந்த மன்வந்திரத்தில் முறையே கிருத,திரேத,துவாபர யுகங்கள் முடிந்து இப்போது கலியுகம் நடைபெறுகிறது.


இந்த நான்கு யுகங்களும் மகாயுகம் என்று அழைக்கப்படும்.இந்த மகாயுகத்தின் கால எல்லை 12000 தேவ வருஷங்கள் ஆகும்.இது மனிதக் கணக்கில் 43,20,000 வருடங்கள் ஆகும்.இது போன்று சுழற்சி முறையில் 71 மகாயுகங்கள் முடிவுற்றதால் வைவஸ்த மனுவின் ஆட்சி முடிந்து அந்த மன்வந்திரமும் முடியும். 


ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன்,தேவர்கள்,முனிவ ர்கள் என்பவர்கள் மாறுவார்கள்.வைவஸ்த மனுவின் ஆட்சியில் நடைபெறும் இக்கலியுகத்தில் அத்ரி,வசிஷ்டர்,காசியபர்,கௌதமர்,பரத்வாஜர்,விஸ்வாமித்திரர் மற்றும் ஜம்தக்னி ஆகிய எழுவரும் இந்த மன்வந்திரம் முழுதும் இருப்பார்கள்.இதற்குரிய தேவதைகள், சத்தியர்கள்,ருத்ரர்கள்,விஸ்வதேவர்கள்,வசுக்கள்,மருத்துகள்,ஆதித்தியர்கள் மற்றும் இரண்டு அஸ்வினிகள்.


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11