பிரம்ம புராணம் - 6
வைவஸ்தமனு பரம்பரை
-----------------------------------
சூரியனுக்கும், விஸ்வகர்மாவின் மகளுக்கும் பிறந்த முதல் குழந்தை வைவஸ்தமனு எனப்படும்.இந்த மனுவிற்கு நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்ததால் அவன் ஒரு பெரிய யாகத்தை நடத்தினான்.அ தன் பலனாக இக்சுவாகு முதலில் ஒன்பது பேர் மைந்தர்களாகப் பிறந்தனர். பின் நூறு மைந்தர்கள் பிறந்தனர்.ஒரு யாகம் நடத்துவதற்காக காட்டில் சென்று ஒரு மிருகத்தை வேட்டையாடி அதன் உடலைக் கொண்டு வருமாறு இக்சுவாகு முதல் மைந்தனான விருக்சியை ஏவினான்.காடு சென்று வேட்டையாடிய விருக்சி ,அதிகம் பசித்ததால் அவ்வேட்டை மிருகத்தின் ஒரு பகுதியைத் தின்று விட்டான்.எச்சிலான பாகத்தைக் கொண்டு வந்ததால் நாடு கடத்தப் பட்டான்.இக்சுவாகு இறந்த பின விருக்சி மீண்டும் நாட்டிற்கு வந்து ஆட்சி செய்யலானான்.இவன் ஆட்சி செய்த பகுதிக்கு அயோத்தி என்று பெயர்.விருக்சியின் மகனான காகுஸ்தன் பரம்பரையில் தோன்றியவனே ராமன் ஆவான்.
திரிசங்குவின் கதை
------------------------------
துந்துபி என்ற அசுரனனைக் கொன்ற குபலஷ்வாவின் மைந்தர்களில் ஒருவனாகி திருதஷ்வாவின் பரம்பரையில் வந்த "திரயருனி" முறையான ஆட்சியை மேர்கொண்டான்.ஆனால் அவன் மகனான சத்யவிரதன் பெயருக்கு நேர் மாறாக நடந்து கொண்டான்.அவன் கொடுமை அதிகமாகவே அவர்கள் குருவாகிய வசிட்டர் அரசிடம் சொல்லி சத்யவிரதனை பிரஷ்டம் செய்து நாடு கடத்தினார்.திரயரினி இறந்ததும் நாட்டை ஆளயாரும் இல்லை.பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் இறக்கத் தொடங்கின.இந்நிலையில் அந்நகரில் வாழ்ந்த விஸ்வாமித்திரர் தன் குடும்பத்தை விட்டு விட்டு தவம் செய்ய சென்று விட்டார்.
பசிக்கொடுமைத் தாளாமல் விஸ்வாமித்திரர் மனியவி தன் மகனை விற்க முடிவு செய்தாள்.எனவே அவன் கழுத்தை ஒருகயிற்றினால் கட்டி சந்தைக்கு அழைத்துச் சென்றாள்.வெளியே வசித்து வந்த சத்யவிரதன் அவனை விடுவித்து..விஸ்வாமித்திரர் குடும்பத்தைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான்.உண்பதற்கு ஏதும் இல்லாமல் குலகுருவாகிய வசிட்டரின் பசுவைத் திருடி அதைக் கொன்று தானும் தின்று வசிட்டரின் குடும்பத்தினருக்கும் கொடுத்தான்.இதையறிந்த வசிட்டர் சத்யவிரதனிடம் வந்து அவன் மீது மூன்று குற்றங்களை சுமத்தினார்.
முதலாவது குற்றம் தந்தை சொல் கேளாதது
இரண்டாவது குற்றம் பசுவைத் திருடியது
மூன்றாவது குற்றம் பசுவைக் கொலை செய்தது
இதனால் அவன் முக்குற்றம் செய்தவன் என்ற பெயரில், அவன் பெயர் திரிசங்கு என்றாயிற்று.தவத்தில் இருந்து மீண்ட விஸ்வாமித்திரர் நடந்தவற்ரை அறிந்து திரிசங்குவை அரசனாக்கி ஆளச் செய்தார்.இறுதியிலிந்த உடம்புடனேயே திரிசங்கு சொர்க்கம் செல்ல தன் வர பலத்தால் ஏற்பாடு செய்தார் விஸ்வாமித்திரர்.
தசரதனின் முன்னோர்
-------------------------
சூரிய வம்சத்தில் தோன்றிய திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன்.அவன் பரம்பரையில் வந்தவன் திலீபன்.அவன் மகனாகிய பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் வந்தது.இவர்களின் வழியில் தோன்றியவன் ரகு.இவனது பேரனே ராமனின் தந்தையான தசரதன் (பிரம்ம புராணத்தில் இந்த வம்சாவளி பற்றி உள்ள செய்தி இவ்வளவேவாகும்)
சந்திர வம்சம்
-----------------------
படைப்புக் காலத்தில் பிரம்மனுடைய எண்ணத்தில் தோன்றிய ஏழு பிள்ளைகளில் அத்ரி" முனிவரும் ஒருவர்.செய்தற்கரிய தவத்தை மேற்கொண்ட அவர் தவ ஆற்றல் பெரும் சக்தியாக வெளிப்பட்டு விண்ணில் பரவியது.அவ்வாற்றலைத் தாங்க முடியாத ஆகாயம் அதனை மீண்டும் பூமிக்கேத் திருப்பியது.பூமிக்கு வந்த ஆற்றலில் ஒரு பகுதியை சந்திரணாக பரிண்மைத்தது.சந்திரனின் ஆற்றலைக் கண்ட பிரம்மன் தன் ரதத்தில் அவனை ஏற்றிக் கொண்டு பூமியை 21 முறை வலம் வந்தான்.அதன் பிறகு சோமனான சந்திரன் நூறு பத்ம யுகங்கள் தவம் செய்தான்.இத்தவத்தை மெச்சிய பிரம்மன் உலகத்தில் உள்ல செடி,கொடி,மரங்களின் தலைமைப் பதவியையும்,பிராமணர்களின் தலைமைப் பதவியையும்,சமுத்திரங்களின் தலைமைப் பதவியையும் கொடுத்தான்.இதை அடுத்து சோமன் ராஜசூய வேள்வி நடத்தி ஏராளமான செல்வத்தைப் பெற்றான்.அச்செல்வத்தின் வளர்ச்சி சோமனுக்கு தலைக்கனத்தை ஏற்படுத்தியது.தன் அதிகார வெறியில் தேவகுருவான பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாரையைக் களவாடி கொண்டு வந்து விட்டான்.இத்தீயச் செயலுக்கு உடந்தையாக அரக்கர்களும், அவர்கள் குருவான சுக்கிராச்சாரியாரும் இருந்தனர்.தாரைக்காக தேவர்களுக்கும், சோமனுக்கும் நீண்ட காலம் போர் நடந்தது.இறுதியாக பிரம்மன் தலையிட்டு தாரையை மீட்டு பிரஹஸ்பதியிடம் ஒப்படைத்தான்.தாரையை ஏற்றுக் கொண்ட பிரஹஸ்பதி..அவளுக்கும், சோமனுக்கு பிறந்த பிள்ளையான் அபுதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.இந்த புதன்தான் இலாவை மணந்தவன் ஆவான்.
Comments
Post a Comment