பிரம்ம புராணம் - 7
மன்னன் யயாதியின் பரம்பரை
-----------------------------------------------
மன்னன் நகுஷனின் ஆறு பிள்ளைகளில் ஒருவனாகிய யயாதி ஆட்சி மேற்கொண்டு உலகம் முழுதும் வென்றான்.அவனுடைய ஐந்து மகன்களும் நாட்டை கிழக்கு,மேற்கு,தெற்கு, வடக்கு,நடுப்பகுதி என ஐந்து பகுதிகளாகப் பிரித்து அடசியை ஒப்படைத்து விட்டு, உலகத்தைச் சுற்றிப் பார்க்க நினைத்தான் யயாதி.ஆனால், அதற்கு தன் முதுமை இடையூறாக இருக்கும் என்று கருதியவன், தன் மூத்த பிள்ளையாகிய யது விடம் தன் முதுமையைப் பெற்றுக் கொண்டு அவன் இளமையைத் தருமாறு கேட்டான்.ஆனால் அவனும், மற்ற பிள்ளைகளும் அதற்கு மறுப்பு தெரிவிக்க, கடைசி பிள்ளையான புரு மகிழ்ச்சியுடன் தன் இள்மையைத் தந்தான்.இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி,நீண்ட காலம் உல்கைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவண் இளமையைத் திருப்பித் தந்தான்.புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் எனப் பெயர் வரக் காரணமான பரதன் ஆவான்.பரதனின் பரம்பரையில் வந்த "குரு" என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்கள் கௌரவர்கள் ஆவார்கள்.மன்னன் குரு ஆட்சி புரிந்த இடமே குருக்ஷேத்திரம் ஆகும்.
யயாதியின் மகளாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள்,கேரளர்கள், சோழர்கள் ஆவார்கள்.
யயாதியின் மற்றொரு மகளாகிய துருயயாவின் பரம்பரையில் வந்தவர்கள் காந்தார மன்னனாகிய சகுனி முதலானவர்கள்.யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவர்களே இராவணனை வென்ற கார்த்தவீரிய அர்ச்சுனன ஆவான்.யயாதியின் மற்றொரு பேரனாகிய குரோஷ்குவின் வழியில் வந்தவனே கிருஷ்ணன்.
ஆதித்தன் (சூரியன் ) கோயில்--------------------------------------------
கீழ் கடற்கரையில் மணற்பாங்கான பிரதேசத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் உள்ளது..இந்தக் கோயில் உள்ள பகுதி உத்கலநாடு எனப்படும்.ஆதவனின் பிம்பம் உள்ள இதற்கு "கோனாதித்யா" என்ற பெயரும் உண்டு.இதற்கு "கொனார்கா" என்ற பெயரும் உண்டு.அருகன் என்ற பெயரும், ஆதித்தன் என்ற பெயரும் சூரியனைக் குறிக்கும்.இவை இரண்டும் கலந்து மருவி.."கோனாரகா" என்று சொல்லப்படுகிறது.இக்கோயில் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு..எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை சந்தனக்கட்டையில் வரைய வேண்டும்.அத்தாமரையின் நடுவே ஒரு தாமிர பாத்திரத்தில் நெய்,எல்,தண்ணீர்,சிவந்த சந்தனக்கட்டை,சிவப்புப் பூக்கள்,தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து சூரியன் புறப்படும் நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
துவாதச ஆதித்தர்கள் என்று சொல்லப்படும் பொழுது பன்னிரெண்டு சூரியர்கள் என பொருள் கொள்ளாது,ஒரே ஆதித்தன் பன்னிரெண்டு வகையான பணீகளைச் செய்யும் பொழுது அதற்குரிய பெயரினைப் பெறுகிறான்.உதாரணமாக விஷ்ணு என்ற பெயரில் அரக்கர்களை அழிக்கின்றான்.தத்தா என்ற பெயரில் உயிர்களைப் படைக்கின்றான்.வருணன் என்ற பெயரில் நீரில் இருக்கின்றான்.சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களில் பருவங்களுக்கு ஏற்ற முறையில் பல்வேறு மாறுபாடுகளை செய்கிறான்.
உலகில் வாழ்விற்கு மூலமாக இருப்பவன் சூரியன்.ஆதலால் பன்னிரெண்டு சூரியர்கள் என சொல்லப்பட்டதோடு அல்லாமல் பன்னிரெண்டு சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டன.
அவை..
ஆதித்யா, சூர்யா,அருக்கன்,பிரபாகரன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,பானு,திவாகரன்,ரவி போன்றவையாகும்
இவையன்றி நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறியதாக பிரம்ம புராணம் சொல்கிறது.
Comments
Post a Comment