பிரம்ம புராணம் - 9


 

மார்க்கண்டேயர்

---------------------------

யுக முடிவில் அண்டம் முழுதும் நெருப்பு சூழ்ந்து அனைத்தும் எரிந்து விட்ட நிலையில் மார்க்கண்டேய முனிவர் மட்டும் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்யும் நிலையிலேயே இருந்தார்.யுக நெருப்பு கூட அவரை அண்ட முடியவில்லை.ஆனால் அவர் கண் விழித்த போது அனைத்தும் அழிந் திருப்பதையும் ஒரு ஆலமரம் மட்டும் தனித்து நிற்பதையும் பார்த்தார்.அம்மரத்தினடியில் அமர்ந்து விஷ்ணுவை தியானிப்பதைத் தொடர்ந்தார்.அதன் பயனாக இப்பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை   பன்னிரெண்டு ஆண்டுகாலம் விடாது பெய்தது.இப்போது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம்.நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில் பாலகன் ஒருவன் படுத்திருப்பதைக் கண்டார்.அப்பாலகன் ஆணைப்படி அவனது வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர்.பாலகன் வயிற்றினுள் அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பதைக் கண்டு வெளியே வந்தவர் விஷ்ணுவான அவருடன்.. பல்லாண்டு காலம்  இருந்தார்.அத்தவத்தினை மெச்சிய விஷ்ணு..வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினர.உடன் மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும்..மக்கள் மனதில் அரியும்..சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.விஷ்ணுவும் அதற்கு இசைய சிவபெருமானுக்கு "புவனேஷ்வர்"ஆலயம் நிர்ணயிக்கப்பட்டது.


ஸ்வேதா என்ற நேரமையுள்ள அரசன் ஜகன்னாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேதா மாதவன் எனும் பெயரையுடைய விஷ்ணு ஆலயத்த்தைக் கட்டினான்.


மகாபலி கதை

--------------------------

முன்னொரு காலத்தில் தைத்தியர்கள் என்ற அசுர குலத்தில் பலி என்ற அரசன் ஆண்டு வந்தான்.நேர்மை,அன்பு இவற்றிலும் சிறந்து விளங்கியதால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை.எனவே தேவர்கள் சூழ்ச்சி செய்து..மகா விஷ்ணுவை வேண்ட, அவர் வாமனனாக வந்து பலிக்கு மோட்சம் தந்து, பலியின் நாட்டை தேவர்களுக்குத் தந்தார்.


தீர்த்த சிறப்பு -

---------------

வானதி ஆகிய கங்கையின் ஒரு பகுதியை பகீரதன் தன் முன்னோர்களுக்காகப் பூமிக்குக் கொண்டு வந்தான்.உல்க மக்கள் வாழ்வு மலர கௌதம முனி மற்றொரு பகுதியை பூமியில் பரவுமாறு செய்தான்.அதனால் கங்கைக்கு "கௌதமி" என்ற பொருள் உண்டாயிற்று.கௌதமி கங்கைக்கு ஒருதுறைக்கு "கபோத தீர்த்தம்"(புறா தீர்த்தம்)  என்று பெயர்.ஒரு மரத்தில் வாழ்ந்து வந்த இரண்டு புறாக்களில் இரை தேடிச் சென்ற பெண் புறாவை வேடன் ஒருவன் பிடித்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியில் வந்து தங்கினான்.பெண் புறாவைக் காணாது வருந்தி அழுத ஆண் புறாவின் குரலினைக் கேட்ட பெண் புறா..தான் கூண்டுக்குள் இருப்பதைச் சொல்லி விட்டு ,"இயற்கையின் படைப்பில் ஒன்றையொன்று தின்றுதான் வாழ்கின்றன.எனவே அவனுக்கு உணவாவதில் தவறில்லை.தவிர நாம் இருக்கும் இடத்திற்கு வந்து தங்கியுள்ள அவனுக்கு குளிரைப் போக்கி உணவு தர வேண்டியது நமது கடமை"என்று பெண் புறா சொன்னதைக் கேட்ட ஆண் புறா அதற்கு உடன்பட்டு தீ மூட்டி அவனது குளிரை போக்கியது.பின் அத்தீயில் விழுந்து அவனுக்கு உணவாகியது.

இவர்கள் உரையாடலைக் கேட்ட வேடன் பெண் புறாவைக் கூண்டில் இருந்து விடுவித்தான்.ஆனால் பெண் புறாவோ, "என்னையும் உண்" என்று சொல்லிவிட்டு அதுவும் தீயில் விழுந்தது.தேவர் உலகில் இருந்து விமானம் ஒன்று வந்து இரண்டு புறாக்களையும் உயிருடன் ஏற்றிச் சென்றது.இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேடன் மனம் மாறி, நல் வாழ்வு வாழத் தொடங்கினான்,கௌதமி கங்கையின் கரையில் இப்புறாக்கள் வசித்த இடம்..கபோத தீர்த்தம் என வழங்கப்படலாயிற்று.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11