பிரம்ம புராணம்




(பிரம்மன்,பிரம்மம் இரண்டு பெயர்களும் முற்றிலும் வெவ்வேறானவை.பிரம்மம் என்பது பரபிரம்மத்தைக் குறிக்கும் சொல்.பிரம்மன் என்பது மும்மூர்த்திகளில் ஒருவராகிய நான் முகனைக் குறிக்கும்.இப்புராணம் பிரமன்+புராணம்=பிரம்ம புராணம் என்று பெயர் பெற்றுள்ளது.இதுகுறிப்பிடுவது பிரம்மனையே என அறிந்து கொள்ளவும்) 

பிரம்ம புராணம் என கூறப்படும் இப்புராணம் ஆதி புராணம் என்று சொல்லப்படும்.

இதன் மூலம் கிடைக்கவில்லை.கிடைத்துள்ள பகுதி மூலத்துடன் எவ்வளவு தொடர்புடையது என சொல்ல முடியாது.ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுள்ள பிரம்ம புராணத்தை உப புராணங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.இந்த பிரம்ம புராணம் பரப்பிரம்மத்தை விரிவாக விளக்கத் தொடங்குகிறது.தைத்திரிய உபநிடத்தில் பிருகுவல்லி கூறும் பரபிரம்மம் பற்றிய இலக்கணத்தை ஒற்றியே இந்த பிரம்ம புராணம் பேசுகிறது.


"எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து இந்த உயிர்கள் தோன்றுகின்றனவோ..எந்தப் பரப்பிரம்மத்தின் தயவால் இந்த உயிர்கள் உலகிடை நிலைபெறுகின்றனவோ..அந்த பரப்பிரம்மத்தினிடையே இந்த உயிர்கள் அனைத்தும் சென்று அடைகின்றன" என்பதே பிருகுவல்லி கூறும் பரப்பிரம்பத்தின் இலக்கணமாகும்.


"சத்தியம்,ஞானம்,ஆனந்தம்,பிரம்மம்"ஆகியவற்றை அடியொற்றி,அது என்றுமுள்ளது,ஆனந்தமயமானது,தூய்மையே வடிவமானது,கருணை நிரம்பியது,ஞான வடிமானது"ஏன்று பிரம்ம புராணம் சொல்கிறது.வாழ்க்கையின் குறிக்கோள் தர்மம் என்கிறது.


இப்புராணம் 246 அதிகாரங்களையும்,14000 பாடல்களையும் கொண்டது.லோமஹரிஷனரே இப்புராணத்தைக் கூறுவதாக பிரம்ம புராணம் தொடங்குகிறது.பிரபஞ்ச உற்பத்தி,நிலை பேறு,அழிவு ஆகியவற்றை மற்ற புராணங்கள் கூறுவது போலவே பிரம்ம புராணமும் கூறுகீற்டஹு.


இந்தப் புராணந்தில் பாரத நாட்டின் வடகோடியிலிருந்து, தென் பகுதிவரை உள்ள ஆறுகள்,தீர்த்தங்கள்,புண்ணியத் தலங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்துவிவரிப்பதன் மூலம்,இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு முதன் முதலாக வடிவு கொடுக்கிறது.கங்கை,கோதாவரி,கோமதி ஆகிய ஆறுகள் நாட்டின் விளைச்சலை அதிகப்படுத்தி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் செயல் விரிவாக சொல்லப் படுகிறது.


இந்தப் புராணத்தில் கங்கைச் சமவெளியில் கங்கை நதி பாயுமாறு பகீரதன் செய்த முயற்சியும்,இந்தியாவின் தென் பகுதியில் கோதாவரி பாயுமாறு கௌதம முனிவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் சொல்லப்படுகிறது.கோதாவரி நதிக்கரையில் உள்ள புண்ணியத் தலங்கள் பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.   


 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம் - 20

விஷ்ணு புராணம் - 22

வாயு புராணம் (சிவ புராணம்) - 11