வாயு புராணம் (சிவ புராணம் ) - 15


 


சுதர்சன சக்கரக் கதை

-------------------------------

முன்னொரு காலத்தில் நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் மிகவும் நலிந்து போனார்கள்.அவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.பலம் பொருந்திய அசுரர்களுடன் போரிட வேண்டுமானால் அதற்குரிய ஆயுதம் வேண்டும்.அதை கொடுக்கக் கூடியவர் சிவபெருமான் தான் என விஷ்ணு கயிலை சென்று..சிவனது ஆயிரம் நாமங்களை தினமும்  சொல்லி நீண்ட காலம் வழிபட்டார்.ஆயிரம் நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது ஒவ்வொரு தாமரைப்பூவை சிவனுக்கு அர்ச்சனையாகச் செய்தார்.ஒருநாள் ஆயிரம் பூக்களில் ஒன்று குறைந்த்து.உடனே தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படும் அவர் தனது ஒரு  கண்ணைப் பறித்து அர்ச்சனை செய்து விட்டார்.மன்ம மகிழ்ந்த சிவன் வெளிப்பட்டு, "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்க, "அசுரர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதம் வேண்டும்" என்று கேட்டார்.சிவபெருமான் மகிழ்ந்து சுதர்சன சக்கரத்தைத் தந்தார்  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11