வாயு புராணம் (சிவ புராணம்) - 20

 ருருவின் கதை

-----------------------


ருரு என்றொரு அரக்கன் இருந்தான்.அவன் தற்செயலாக ஒருநாள் பார்வதியைப் பார்த்து விட்டான்.பின், அவளையே மணக்க வேண்டும் என கடுந்தவம் இருந்தான்.தவத்தின் முடிவில் வந்த பிரம்மன் "என்ன வரம் வேண்டும்" எனக் கேட்டார்.ருருவும், "நான் பார்வதையை மணந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றான்.


இது என்னால் முடியாத காரியம் என பிரம்மா சென்றூவிட..ருருவின் தவம் தொடர்ந்தது.தவத்தின் கடுமையால்..வெளிப்பட்ட உஷ்ணம் சுற்று வட்டாரத்தையே எரித்தது.ருரு தவம் இருந்த மலையம் என்ற மலையும் எரியத் தொடங்கியது.


அந்தச் சூடு மேருவைத் தாக்க...சிவனும், பார்வதியும் கூட ஓட வேண்டியதாயிற்று.அப்போது பார்வதி சிவனைப் பார்த்து, "நாம் ஏன் ஓடுகிறோம்?" என்றாள்.சிவன், ருரு என்ற அரக்கன் உன்னை மணந்து கொள்ள வேண்டி தவம் இருக்கின்றான்.அதனால்தான் இப்படி..என்றார்.அதற்கு பார்வதி, "இதற்கு ஏதாவது செய்யுங்கள்" என்றாள். 


உடன் சிவன், "இது உன் சம்பந்தமான விஷயம்.நீதான் ஏதாவது செய்ய வேண்டும்"என்று கூறியதும்..பார்வதி சுற்று முற்றும் பார்த்தாள்.ஒரு சிங்கமும், யானையும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.சிங்கத்தைக் கொன்று அதன் தோலை போர்த்திக் கொண்டாள்.சிங்கத்தின் குருதி வடிந்ததால் தலையும், குழலும் ரத்தத்திலேயே சிவந்தது.இந்த வடிவுடன் பார்வதி ருருவிடம் சென்று, "ருரு என்னை மணக்க வேண்டும் என்றுதானே தவம் இருக்கிறாய்.இதோ நான் வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?" என்றாள்.ருரு கண்ணை விழித்துப் பார்த்து "நீ யார் என எனக்குத் தெரியாது.மகா கோர சொரூபியாய் இருக்கின்றாய்.பார்வதியின் சந்திர பிம்ப முகமும்,தாமரை போன்ற கைகலும்,கால்களும் உனக்கு இல்லை.உன் உருவத்தை நீயே பார்த்துக் கொண்டால் உன் சொரூபம் தெரியும்" என்று கூறிவிட்டு,தன் கதாயுதத்தால் பார்வதியைத் தாக்கினான். 


சினம் கொண்ட பார்வதி ருரு எறிந்த பல்வேறு ஆயுதங்களை தடுத்து விட்டுத் தன் பல்லாலும்,கைகளாலும் அவனைக் கொலை செய்ய முயன்றாள்.இப்போது ருருவின் உடலிலிருந்து பல்வேறு உருவங்கள் தோன்றின.பார்வதி தன் அம்சமான பல சக்திகளைப் படைத்தாள்.அந்த சக்திகள் ருருவின் உருவிலிருந்த பல்வேறு அசுரர்களைத் தின்றுத் தீர்த்தன.பயந்த ருரு பூலோகம், சொர்க்க லோகம்,பாதாள லோகம் ஆகிய இடங்களுக்கு ஓடினான்.பார்வதி அவனை எல்லா இடங்களிலும் துர்டஹ்தி வரவே ருரு ஒன்றும் செய்ய முடியாமல் நின்று விட்டான்.பார்வதி அவன் உடலைக் கிழித்து, அவன் தோலைப் போர்த்திக் கொண்டு வந்து நின்றாள்.சிவனிடம் வந்த பார்வதி அணிந்திருந்த சிங்கத்தோலை சிவனிடம் கொடுத்து விட்டு..ருருவின் தோலை தான் அணிந்து கொண்டாள்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11