வாயு புராணம் (சிவ புராணம்) - 16

 சிவராத்திரி விரதம்

----------------------------

ருருத்ரகா என்ற வேடன் காட்டில் வாழ்ந்து வந்தான்.கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும்,மிருகங்களை வேட்டையாடுவதும் அவன் தொழில்.யாருக்கும் கருணை காட்டமாட்டான்.

ஒருமுறை, அவன் குடும்பத்தினர் பசியால் வாட, அவனிடம் ,"ஏதேனும் வேட்டையாடிக் கொண்டு வா" என்றனர்.வேடனும், வேட்டைக்குப் புறப்பட்டான்.எந்த விலங்கும் கிடைக்காமல்..நீர் நிறைந்த குட்டையின் அருகில் நின்ற அவன்,எப்படியும் ஏதேனும் மிருகம் அங்கு தண்ணீர் குடிக்க வரும் என எண்ணினான்.பின், ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு பக்கத்தில் உள்ள மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்திருந்தான்.அது ஒரு வில்வ மரம்.எனவே மரத்தினடியில் ஒரு லிங்கம் இருந்தது.அது அவனுக்குத் தெரியாது.அன்று சிவராத்திரி வேறு..


பொழுது சாய்ந்ததும் ஒரு பெண் மான் நீர் குடிக்க வந்தது.மகிழ்ச்சிய டைந்த அவன் வில்லைக் கையில் எடுத்தன.அப்போது குடுவையில் இருந்த னீற் சற்று கீழே சிந்தியது.அவன் சற்று அசைந்து எழுந்ததால் மரத்தில் உள்ள வில்வங்கள் சில கீழே விழுந்தன.இவை இரண்டும் கீழே இருந்த லிங்கத்தின் மீது விழுந்தன.


வேடன் குறி பார்த்த போது ,அந்தப் பெண் மான் சொல்லியது.."வேடனே! இப்போது என்னைக் கொல்ல வேண்டாம்.என் கணவரும், பிள்ளைகலும் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.நான் அவர்களிடம் சென்று விடை பெற்று மீண்டும் இங்கு கண்டிப்பாக வருகிறேன்" என சத்தியம் செய்தது.மனமிரங்கிய வேடன் அதற்கு சம்மதித்தான்..   


அந்த பெண் மான் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு பெண்மான் அங்கு வந்தது.முதல் மானுக்கு நடந்த அனைத்தும் இம்மானுக்கும் நடந்தது.இரண்டாம் முறையாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம்,வில்வார்ச்சனை ஆகியவற்றை அவன் அறியாமல் செய்தான்.இந்த பெண்மானும்..முன்னர் வந்த பெண்மானும் சகோதரிகள்.ஒரே ஆண்மகனுக்கு இரண்டு பெண்மான்களும் மனைவியர் ஆகும்.


இதற்கு அடுத்து ஒரு ஆண்மான் வந்தது.அதே உரையாடல்.அதே போண்று வேடனும் தன்னை அறியாமல் வில்வார்ச்சனை, அபிஷேகம் சிவலிங்கத்திற்கு செய்தான்.ஆண்மான் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று மான்களும் சேர்ந்து தங்கள் சத்தியத்தைக் காப்பாற்ற அங்கு வந்தன.ஒவ்வொன்றும் தன்னையே கொல்லும்படி சொல்லின.இதுபோதாது என அவற்றின் பிள்ளைகளான மான் கன்றுகளும் அங்கு வந்து, தாய்..தந்தையை இழ்னஹ்து நாங்கள் உயிர் வாழமுடியாது..எங்களையும் கொன்று விடுங்கள் என்றன.வேடன்..செய்வதறியாது நின்றான்.


அப்போது அவனே அறியாமல்..சிவராத்திரி அன்று மூன்று கால பூஜையால், சிவன் வெளிப்பட்டு..அவன் குற்றங்களை மன்னித்து..இந்து விநாடி முதல் உன் பெயர் குகன் என அறியப்படுவாய்..ஸ்ரீராமன் இங்கு வரும் போது அவனுக்குத் தோழனாக நீ இருப்பாய் என்று சொல்லி மறைந்தார்.

 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11