வாயு புராணம் (சிவ புராணம்) - 18

 கௌரியின் கதை

---------------------------

பார்வதி கருநீல நிறத்தில் இருந்தாள்.சிவன் அவளைக்   காளி என்றே அழைத்தார்.பார்வதிக்கு இது பிடிக்கவில்லை.நான் கறுப்பாய் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்..என்னை விரும்புவது போல பாசாங்கு செய்து என்னை ஏன் மணந்து கொண்டீர்கள்? நான் பிரம்மனை நோக்கித் தவம் இருந்து இந்த நிறத்தை மாற்றிக் கொள்கீறேன் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.பிரம்மன் தோன்றி, "என்ன வேண்டும்?" என வினவ..என் நிறத்தை ஒழித்துவிட்டு நான் கௌரியாக வேண்டும்" என்றாள்.


பிரம்மன் வருவதற்கு முன் பார்வதியின் எதிரே ஒரு கொடிய புலி அவளை உண்ணும் எண்ணத்துடன் அமர்ந்திருந்தது.தன்னிடம் அது அன்பு பாராட்டுவதாக எண்ணி பார்வதி மகிழ்ச்சியுடன் புலியின் உடம்பினுள் பிரவேசித்தாள்.அவளுடைய சக்தி உள்ளே புகுந்ததால் புலி மிகவும் சதுவாக மாறி அவளுடன் இருந்து விட்டது.


பிரம்மன் பார்வதியைப் பார்த்து, "நீ விரும்பியதை அடைவாய்" என்றார்.பார்வதியின் உடலில் இருந்த கறுப்பு நிறம் உதிர்ந்து விட்டது.அக்கறுப்பையெல்லாம் திரட்டி பிரம்மன் எடுத்துக் கொண்டார்.  அவர் வேண்டியதும் அதுதானே!


காரணம் இரண்டு அரக்கர்கள் சும்பன்,நிசும்பன் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தனர்.பிரம்மன் எதிர்ப்பட்டதும் எந்த ஆண்மகனும் தங்களை கொல்ல முடியாத வரம் பெற்றனர்.அதன் பின்னர் அவர்கள் செய்த கொடுமியக்கு அளவேயில்லை.பிரம்மன் சிவனிடம் சென்று நடந்ததைக் கூறி பார்வதியின் ஆற்றலில் ஒரு பகுதியைப் பெண்ணாக்கித் தந்தால் சும்பன்,நிசும்பனை அழிக்க முடியும் என வேண்டிக் கொண்டார்.பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கவே சிவன் ,பார்வதியை தவம் செய்யும் நிலைக்குத் தள்ளினார்.கீழே விழுந்த கறுப்பை எல்லாம் திரட்டி கௌசிகி என்ற பெண்ணை பிரம்மனிடம் ஒப்படைத்தார்.பார்வதியின் அம்சமாக அவள் இருந்தாள்.அவளைக் கொண்டே சும்பன், நிசும்பனை அழிக்கச் செய்தான் பிரம்மன்.


கௌரியாக மாறி புலியையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றாள்    பார்வதி.சிவன் அப்புலியை ஒரு ஆணாக மாற்றி நந்திக்குத் துணையாக சோமநந்தி என்ற பெயருடன் இருக்கச் செய்தார் சிவன். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11