வாயு புராணம் (சிவ புராணம்) - 19

 உபமன்யுவின் கதை

--------------------------------

முன்னொரு காலத்தில் வியாக்ர பாதர் (புலிக்கால்  முனிவர்) என்ற முனிவர்க்கு உபமன்யு என்ற ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை வளர்ந்த பொழுது,தனக்கு பால் கொடுக்க வேண்டும் என அழுதது.தாய்ப்பால் போன்ற ஒரு பொருளைக் கொடுத்தால், குழந்தை அதைச் சாப்பிட்டுப் பார்த்து தந்தையிடம் சென்று இது பாலில்லை...பாலின் ருசி இதில் இல்லை என அடம் பிடித்தது.அப்போது உபமன்யுவின் தாய்,"நானே வறுமியயில் வாடுகிறேன்..பாலுக்கு எங்கே போவேன்?அரிசிக் கஞ்சிதான்  தந்தேன்" என்றாள்.உபமன்யு உடன், சிவனைக் குறித்து தவம் செய்து பாலைப் பெறுவேன்.போகிறேன்..எனச் சொல்லி சிவனை வேண்டி தவம் இருந்தார்.சிவன் நேரில் வந்து ஒரு மந்திரத்தையும்..ஆபத்து நேர்ந்தால் காத்துக் கொள்ள  அகோராஸ்திர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்ப உபமன்யு இமயமலையில் ஒரு பகுதிக்குச் சென்று தவத்தைத் தொடங்கினான்.அரக்கர்களும், அசுரர்களும் எவ்வளவோ முயன்றும் தவத்தைக் கலைக்க முடியவில்லை.இறுதியில் அவனை சோதனை செய்வதற்காக சிவன் இந்திரன் வடிவத்தில் அவன் முன் தோண்றினான்.உபமன்யு கண்விழித்து, "தேவர் தலைவனே! என்னை வந்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி" என்றான்.


தேவேந்திரனாக வந்த சிவன் அவனிடம், "உனக்கு என்ன வேண்டும்?யாரைக் குறித்து நீ கடும் தவம் செய்கிறாய்" எனக் கேட்க..உபமன்யு சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்வதாகக் கூறினான்.


அதைக் கேட்ட இந்திரன்.."சிவனா..அவன் ஒன்றுக்கும் உபயோகப்படாத பைத்தியம்.அவனைக் குறித்து ஏன் தவம் செய்கிறாய்?" என்றார்.


அவர் சிவன் என அறியாத உபமன்யு அகோராஸ்திர மந்திரத்தைப் பயன் படுத்தி விட்டான்.அது சிவனது அஸ்திரம் ஆனதால் உடன் வந்த நந்தி அதை ஏற்றுக் கோண்டார்.சிவன் சிவன் தன் வடிவத்தைக் காட்டினார்.பல மந்திரங்களையும் உபதேசித்துப் பாலுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் வரத்தினையும் தந்தார்.


நீண்ட காலம் கழித்து கிருஷ்ணன் உபமன்யுவைப் பார்க்க வந்தார்.அப்போது உபமன்யு சிவனைப் பற்றிய பல ரகசியமான மந்திரங்களையும் கிருஷ்ணனுக்கு உபதேசித்தார். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11