வாயு புராணம் (சிவ புராணம்) - 22
சுதநிகாவும்..சகஸ்ரநிகாவும் ------------------------------------------ மன்னன் சுதநிகா தினமும் அந்தணருக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான்.இதனிடையே அவன் இறந்துவிட அவன் மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான்.அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான்.வருமானம் இழந்த அந்தணர்கள் மன்னனிடம் சென்று..உங்கள் தந்தை எங்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத் ட்ஹேடிக் கொண்டு விட்டார்.நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று கேட்டனர்.சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து..தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்கு புண்ணியம் தேடித் தந்தீர்களே..இப்போது என் தந்தை எங்கிருக்கீறார்?என்று சொல்ல முடியுமா? என்றான்.அது முடியாது என்றதும் மன்னனை எப்படியாவது திருப்தியடைய வைக்க வேண்டும் என்பதற்காக..பார்க்கவ முனிவரிடம் சென்ற அந்தணணர்கள்..இறந்த அரசன் எங்கிருக்கின்றான் என்பதை அவர் தன் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு வேண்டினர்.பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாட, சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். வழியில் ஒரு அந்தணன் பார்க்கவரைத் தடை செய்தான்."நான் இறப