Posts

விஷ்ணு புராணம் - 9

 யாக்ஞவல்கியர் கதை ------------------------------- ஒரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர்.பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருந்ததால் ,அனைவரும் அக்கூட்டத்திற்கு வர வேண்டும்,அப்படி யாராவது வராமல் இருந்து விட்டால்..எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சென்றடையும் என ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷியால் இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை.யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜூர் வேதத்தை இருபத்தேழு பங்குகளாகப் பிரித்து அவர் கற்றுத் தந்தி ருந்தார்.கூட்டத்திற்கு வராததால் எட்டாம் நாள் வைசம்பாயனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலையில் காலை வைத்து அவரைக் கொன்று விட்டிருந்தார்.இந்த பிரம்மஹத்தித் தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து ,இந்த தோஷம் தன்னை விட்டு அகல வேண்டுமானால் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியும் சொன்னார்.   இதைக் கேட்டதும் அந்த இருபத்தியேழு பேரில் ஒருவரான யாக்ஞவல்கியர் எழுந்து "யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது.நான் ஒருவனே இந்த ...

விஷ்ணு புராணம் - 8

 வேத வியாசர் பலர் ------------------------------- ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுத்துள்ளார்.உருவெடுத்தப் பின்னர் வேதங்களை வகைப்படுத்தியுள்ளார்.வைவஸ்த மன்வந்திரங்களாகிய இந்த காலகட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28மூறை வகைப்படுத்தி விட்டார்.இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டுப் பேர் ஆவர். அவர்கள், சுவயம்பு வியாசர்,பிரஜாபதி வேத வியாசர்,பிருகஸ்பதி வேத வியாசர்,மிருத்யூ வேத வியாசர்,பரத்வாஜ வேத வியாசர்,கிருஷ்ண துவைபாயன வியாசர் முதலானோர்.விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேத வியாசர் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஆவார்.இவர் சிரஞ்சீவி ஆவார். "ஓம்" எனும் பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும் பரப்பிரம்மம் எங்கும்,எப்பொழுதும்,எப்பொருளிலும் நிறந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி,அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல விஷயங்களாகத் தெரிபவர்.ரிக், யஜூர்,சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஒரு லட்சம் பாடல்கள் உள்ளன.கிருஷ்ணதுவைபாயன வேத வியாசர் இந்த வேதங்களைப்  பிரிக்க வேண்டுமென முடிவு செய்ததும்,அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். பைலா...

விஷ்ணு புராணம் - 7

Image
 ஜடாபரதன் கதை ---------------------------- முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மக்ன இருந்தான்.அவன் எப்போதும் விஷ்ணுவை தியானித்தபடியே இருந்தான்.ஒருநாள் அவன் நீராட ஆற்றிற்குச் சென்றபோது,அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்த வந்தது.அந்த சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு பயந்த மான்,தன் குட்டியை ஈன்றதும் இறந்தது.ஆற்றில் விழுந்து விட்ட மான் குட்டியிய பரதன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான்.நன்கு உண்டு வளர்ந்த மான் பின் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவு அருந்தி வந்தது. தன் அரச பதவி, மக்கள்,உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டு,அதை நினைத்தபடியே உயிர் நீத்தான்..பரதன் மானை எண்ணியபடியே உயிர் நீத்ததால் மறுபிறவியில் பூர்வ ஜென்ம நினியவுகளை மறக்காமல் தன் பழைய ஊரான சாலக்கிரமாவிற்கு வந்து அங்கு வாழ்ந்து வந்தான்.சிலகாலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் அந்தணனாகப் பிறந்து வேத சாத்திரங்களில் தேர்ச்சிப் பெற்றான்.பரப்பிரம்மம் பற்றிய ஞானம் பெற்றதால் வேதங்களில்  நாட்டமின்றி துர்நாற்றமுடையத் தோற்றத்துடன் உலாவி...

விஷ்ணு புராணம் - 6

 பிற உலகங்கள் பற்றி ------------------------- பூமியிலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து ச்ந்திரன்,செவ்வாய்,புதன், வியாழன்(குரு),வெள்ளி (சுக்கிரன்),சனி,சப்தரிஷி,துருவ மண்டலங்கள் உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தியச் சுற்றி வருகின்றன.துருவலோகத்திற்கு மேல் ஞான உலகமும்,அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் ட்ஹேவளோகமும் உண்டு.அது இரண்டாபப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம்,வைகுண்ட லோகம் உள்ளன. துருவ உலகம் முதல் சத்திய உல்கம் வரை உள்ள லோகங்கள் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ,புவர்,சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன.உலகங்களில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிட்ட ஏழு உல்கங்களும் இவற்றிற்குக் கீழே உள்ள ஏழு பாதாள உலகங்களையும் அடக்கியுள்ளது.கீழும், மேலுமாக இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கியுள்ள அண்டம் இருளால் சூழப்பட்டுள்ளது.அவ்விருளைக் கடந்து தண்ணீரும்,நீரைக் கடந்து நெருப்பும்,நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.  

விஷ்ணு புராணம் - 5

Image
  பிரகலாதன் கதை ---------------------------- தைத்திரியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன்.மாபெரும் தவங்கள் செய்து மூவுலகினையும் ஆளும் சக்தியினைப் பெற்றான்.தவிர,இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,ஆகியவர்களையும் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான்.அவர்கள் அனைவரும் இங்கும்அங்கும்  அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவை சரணடைந்தனர். எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்யகசிபு தனக்கு மேல் யாருமில்லை,யாரும் இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்தான். அதனால் தைத்திரியர்கள்,தேவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் ..தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.மேலும் தைத்திரிய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டார்.எனவே,அவர் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது அவனின் உத்தரவானது. இந்நிலையில் பிரகலாதன் எனும் குழந்தை அவனுக்குப் பிறந்தது.அவன் ஓரளவு வளர்ந்ததும்,ஒரு ஆசிரியரை வைத்து,அவனுக்குக் கல்விப் புகட்ட உத்தரவிட்டான் கசிபு.கல்வியைத் தொடங்கும் போது விஷ்ணுவின் பெயரை சொல்லக் கூடாது என்றும்,ஹிரண்யன் பெயரை மட்டுமே சொல்ல வே...

விஷ்ணு புராணம் - 4

Image
  துருவனின் கதை -------------------------- பிரம்மனின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர்.மனு எனும் பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர்.மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள்"மானவர்கள்"என்று அழைக்கப் பட்டார்கள்.இவர்களை உத்தானபாதன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.சுனிதி,சுருச்சி என்ற இரு மங்கயர்களை அவன் மணந்தான்.இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன்.அவன் ஒருநாள் அரசனின் மடியின் மீது அமர்ந்திருந்தான்.மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தன் தந்தையின் மடியில் அமர விரும்பினான்.அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சிஅவனை தடுத்தாள்.அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டுமே உண்டு என்றும், அடுத்தபடியாக ஆளப்போகிறவன் அவன்தான்என்றும் கூறினாள்.மிக வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான்.தாய் சுனிதியும் ,"மகனே!இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.முன்பிறவியில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் நல்பதவிகளையும், சுகங்களையும் அடுத்தப் பிறவியில் அடைவர்.,  சுருச்சியும், உத்தமனும்..போன பிறவியின் புண்ணியம் செய்து இப்பிறவியில் இந்நிலையில் உள்ளனர்.நா...

விஷ்ணு புராணம் - 3

 லட்சுமியின் தோற்றம் ---------------------------- மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுதும் சுற்றித் திரிந்தார்.ஒருநாள் ஒரு அழகியப் பெண்..வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள்.அம்மாலையின் மீது விருப்பம் கொண்ட முனிவர் அதைக் கேட்டார்.அப்பெண்ணும் மகிழ்வோடு அம்மாலையை அவ்ருக்குத்தந்தாள்.தலையில் அதை அணிந்து கொண்டு பல இடங்களுக்குச் சுற்றித் திருந்தார் அவர்.ஒருமுறை தன் யானையாகிய ஐராவதத்தில் இந்திரன் ஊர்வலம் வந்தான்.துர்வாசர் தன் தலையில் இருந்த அம்மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார்.அதன் சிறப்பினை அறியா இந்திரன்,அம்மாலையை வாங்கி யானையின் தந்தத்தின் மீது வைத்து விட்டான்.அற்புதமான வாசனையினைக் கண்ட ஐராவதம்...மேலும் வாசனையை அனுபவிக்க ..மாலையின் பக்கமாகத் தன் தும்பிக்கியயை நீட்டிற்று.ஆனால்..அம்மாலை துதிக்கைக்குக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழ்ந்த மாலையைக் கண்டு துர்வாசர் சினம் கொண்டார்.இந்திரன் எவ்வளவு  மன்றாடியும்,மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் தணியவில்லை..லட்சுமி உன்னைவிட்டுப் போய் விடுவாள் என சாபமிட்டார்.இந்திரன்...