Posts

விஷ்ணு புராணம் - 24

 பிரளயங்கள் ----------------- மூன்று வகையான பிரளயங்கள் உண்டு.முதலாவது பிரளயம், பிரம்மனின் ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவதாகும்.இதற்கு நியமித்திக்க பிரளயம் என்று பெயர்.இந்த பிரளயம் தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை..இப்போது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு,கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார்.சூரியனு ய கிரணங்களும் தனித்தனியாக ஒரு சூரியன் போலவே இருந்து நிலத்தைக் கொளுத்தும்.இந்த சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர்,புவர்,சுவர் ஆகிய மூன்று லோகங்களையும் கொளுத்திவிடும்.இதன் பிறகு சூரிய மேகங்கள் சூழ்ந்து  நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும்.மறுபடியும் உல்காம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணீரிலேயே மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார். இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும்.தாமசம்,ராஜசம்,சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும்.பிரளய காலத்தில் பிரகிருதி ,பரமாத்மாவிடம் சென்று அடங்கிவிடும்.இதுவே பிரகிருத பிரளயம் எனப்படும். மூன்றாவது பிரளயம்,அத்யதிக பிரளயம் எனப்படும்.ஆதி ஆத்மீகம்,ஆதிதைவிகம்,ஆதிபௌதிகம் எ...

விஷ்ணு புராணம் - 22

 பிண்டாரகா எனும் க்ஷேத்திரத்தில் கண்வர்,விஸ்வாமித்திரர்,நாரதர் ஆகிய முனிவர்கள் பலர் தங்கியிருந்தனர்.ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணன் மகனாகிய சம்பாவிற்கு பெண் வேடமிட்டு அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்றனர்.முனிவர்களிடம், "இப்பெண்ணுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா இல்லை பெண்ணா" எனச் சொல்லுமாறுக் கேட்டனர்.முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இவர்களின் கேலியியப் பார்த்து, கோபம் அடைந்து.."இது பெண் அல்ல..ஆண்.இவன் உடம்பிலிருந்து ஒரு இரும்பு உலக்கைத் தோன்றப் போகிறது.அந்த உலக்கை யாதவ சமுதாயத்தையே அழிக்கப் போகிறது"என்றனர். பயந்து போன இளைஞர்கள்..அரசன் உக்ரசேனனிடம் சென்று நடந்ததைக் கூறினர்.உரிய காலத்தில் சம்பாவின் உடலிலிருந்து ஒரு உலக்கை வெளியாயிற்று.அரசன் அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி சமுத்திரக் கரையில் தூவி விட்டான்.முழுதும் பொடி செய்ய முடியாமல்,உலக்கையின் சிறு பகுதி மட்டும் நின்றது.அது பொடியாகவில்லை.அத்துண்டை கடளுக்குள் வீசி ஏரிந்துவிடச் சொன்னான்.கடல் கரையில் தூவப்பட்ட சிறு துகள்கள் மிகக் கூர்மையான ..வலிமையுடைய கோரைகளாக முளைத்தன.அக்கோரைகள் முளைத்த இடத்தில் "ப...

23 - கலியுகம்

 கலியுகம் பிறந்து விட்டால் அது எப்படி இருக்கும்? என கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வர்ணாஸ்சிர தர்மங்கள் கலியுகத்தில் பின்பற்ற மாட்டாது. கடவுளை ஒருவரும் வழிபடமாட்டார்கள் குரு-சிஷ்யன் உறவு மறையும் தடி எடுத்தவ்ன எல்லாம் தண்டல்காரன் ஆவான் பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே  காலம் தள்ளுவர் பணம் பாதாளம்வரை பாயும்.பணத்தை பிறர் பொருட்டு செலவு செய்யாமல்..செல்வந்தர்கள் தன் நலனுக்கே பயன்படுத்துவர். பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காது தீயவழிகளிலேயே சேர்ப்பார்கள் ஆண்கள் சாப்பிடும் முன் குளிக்கக்கூட மாட்டார்கள் ஆண்களும், பெண்களும் குட்டையாகிவிடுவர் பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள் அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையேத் தொழிலாகக் கொள்வார்கள் இளமையிலேயே முதுமை அடைவார்கள் யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள் சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெரும் பயனை, திருதாயுகத்தில் ஒரு ஆண்டிலும், துவாபர யுகத்தில் ஒரு மாதத்திலும்..கலியுகத்தில் ஒரே நாளிலும் தவம் செய்து அதன் பலனை அடைய முடி...

விஷ்ணு புராணம் - 21

 சம்பாவின் திருமணம் --------------------------------------  கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனாகிய சம்பா,துரியோதனனின் மகளைக் களவாடி மணம் புரிந்துகொண்டதால் கௌரவர்களால் கைது செய்யப்பட்டான்.இதை அறிந்த யாதவர்கள் கௌரவர்களின் மேல் போர் தொடுக்க விரும்பினர்.அதைத் தடுத்த பலராமன் தான் தனியாகச் சென்று , காரியத்தை முடித்து வருவதாகக் கூரிவிட்டு அஸ்தினாபுர எல்லையினை அடைந்தான். பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர்,கர்ணன்,துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர்.உபசரனை முடிந்த பின்னர் பலராமன் "சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும்" என யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான்.  இதைக் கேட்ட கௌரவர்கள் கடுங்கோபம் கொண்டனர்."யாதவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள் இல்லை.எங்கள் தரத்திற்கு மிகவும் கீழாக உள்ள அவர்கள் எங்களை இவ்வாறு கேட்பது, வேலைக்காரன் தன் முதலாளியைப் பார்த்து ஏவுவது போல உள்ளது.பலராமரே..நீர் திரும்பிச் செல்லலாம்" என்று அவர்கள் கோபத்துடன் சொல்லிவிட்டு , போய் விட்டனர். அவர்கள் சென்ற பின் பலராமன் நகர எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த பலராமன், தன் கலப்பையை பூமியில்...

விஷ்ணு புராணம் - 20

 நரகாசுரனை வென்ற கிருஷ்ணன்,இந்திரனின் நகரமான அமராவதிக்கு, சத்யபாமாவுடன் சென்றான்.தேவர்கள் வந்து அவர்களை வழிபட்டனர்.இந்திரனின் தாயாகிய அதிதியிட்ம் இருந்து நரகாசுரன் பறித்துச் சென்ற காதணிகளை கிருஷ்ணன் அவளிடம் தந்தான்.சத்யபாமாவையும், கிருஷ்ணனையும் அவள் ஆசிர்வதித்தாள். அமராவதியில் இருந்த பாரிஜாத மரத்தைப் பார்த்து அதை துவாரகைக்கு வேரோடு தூக்கிச் செல்ல கிருஷ்ணன் விரும்பினான்.மரத்தை வேருடன் பறித்து கருடனின் முதுகில் ஏற்றினான்.அந்த மரம் இந்திரனின் மனைவி சச்சிக்கு சொந்தமானதாகும்.கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் சாதாரண மனிதர்கள் என நினைத்த அவள்..தேவர்களையும்,இந்திரனையும்.. கிருஷ்ணனுடன் போரிட வைத்தாள்.தேவர்கள்,குபேரன்,அக்னி,எமன், வருணன்.மிருத்துகள்,அஸ்வினிக்கள் ஆகிய அனைவரும் தோற்று ஓடினார்கள்.இந்திரன் வஜ்ராயுதத்தை கிருஷ்ணன் மீது ஏவினான்.கிருஷ்ணன் சக்கரத்தை ஏவாது, தன் வலது கையால் வஜ்ராயுதத்தியப் பிடித்துக் கொண்டான்.இதைக் கண்ட இந்திரன், கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.பாரிஜாத மரத்தையும், வஜ்ராயுதத்தையும் திருப்பிக் கொடுத்தான் கிருஷ்ணன்.ஆனால், இந்திரனோ வஜ்ராயுதத்தை மட்டும் வாங்கிக...

விஷ்ணு புராணம் - 19

 காளிங்க நர்த்தனம் ------------------------ காளிங்க நர்த்தனம் கதையை விஷ்ணு புராணம் வேறு மாதிரி சொல்கிறது.முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு..கடலை விட்டு விட்டு யமுனையில் குடியிருந்தது.யமுனையின் ஒரு பகுதியில் காளிங்கனும்,அதன் குடும்பமும்,உறவினர்களும் ஒரு மடுவில் வசித்து வந்தனர்.யமுனையின் அப்பகுதி நீர் மட்டும் முழுதும் விஷமாக மாறிவிட்டது.இந்நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான்.காளிங்கனும், மற்ற பாம்புகளும் கிருஷ்ணனின் உடலை சுற்றிக் கொண்டு அவனை கடிக்கத் தொடங்கின.நந்தன்,யசோதை, பலராமான் ஆகியோர் இதைப் பார்த்து "கிருஷ்ணா..விளையாடியது போதும்..விரைவில் அவற்றை அழித்து விட்டு வா" என்றனர். உடன் கிருஷ்ணன் எல்லா பாம்புகளையும் அழித்து..காளிங்கனின் தலையில் ஏறி நடனமாடி, அதன் உயிர் போகும் நிலைக்குக் கொண்டு வந்தான்.காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொள்ள, கிருஷ்ணன் அவர்களை மன்னித்து,"இனியும் யமுனையில் நீங்கள் தங்கக் கூடாது.கடலுக்கு சென்று விடுங்கள்"என ஆணையிட்டான். கிருஷ்ணன் காளிங்கனின் படத்தின் மேல் ஆடியதால், அந்த பாதத்தின் சின்னம் எல்லா நாகங்கள்...

விஷ்ணு புராணம் - 18

 சந்தனுவின் கதை ------------------ குரு வம்சத்தில்  வந்த பிரதிபாவின் மகனாகிய சந்தனு இரண்டாவது மகனாகப் பிறந்தும் முதல் மகனாகிய தேவபி காட்டிற்கு சென்று விட்ட படியால் அரசுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.சந்தனு கங்கையையும், சத்தியவதியையும் மணந்தர.கங்கையின் மகனாக பீஷ்மர் பிறந்தார்.சத்தியவதியின் வயிற்றில் விசித்திரவீரியனும்,சித்ராங்கதனும் பிறந்தனர்.விசித்திரவீரியன் மரபில் திருதிராஷ்டிரனும், பாண்டுவும் தோன்றினர்.திருதிராஷ்டிரன் புதல்வர்கள் துரியோதனன் முதல் நூறுபேர் ஆவர்.பாண்டுவின் புதல்வர்கள் ஐவர்.அவர்கள் பஞ்ச பாண்டவர்கள் ஆவர். , கலியுகத்தின் தோற்றம் -------------------------------- விஷ்ணு புராணத்தில் நான்காம் பகுதி கலியுகத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளை விரிவாகத் தெரிவிக்கிறது.பத்மநந்தன் என்ற மன்னன் தோன்றி,சத்திரியர்கள் அனைவரையும் இரண்டாவது பரசுராமனைப் போல ஒழித்து விடப் போகிறான்.அவனுக்கு எட்டு பிள்ளைகள் தோன்றுவர்.இவர்கள் நூறு ஆண்டுகள் ஆட்சி புரிவர்.ஆனால் கௌடில்யன் எனும் அந்தணன் இவர்களைக் கொன்று விடுவான்.அதன் பிறகு மௌரியர்கள் எனப்படுபவர் ஆள்வர்.சந்திரகுப்தனையே கௌடில்யன் அரசனாக நியமி...