Posts

Showing posts from October, 2020

16 _ ஏகாதசி மகிமை

Image
  அவந்தி நகரத்தின் வெளியே நாடு கடத்தப்பட்ட கொடிய பாதகன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவந்தி நகரைச் சுற்றி ஓடும் சிர்பா நதியின் கரையில் இரு விஷ்ணு ஆலயம் இருந்தது.அப்பாதகன் ஒரு விழ்ணு பக்தன்.ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணுக் கோயிலுக்குச் சென்று மனமுருகி பாடும் பழக்கத்தை மேற்கோண்டிருந்தான்.ஒருமுறை ஏகாதசி வழிபாட்டிற்குப் புறப்பட்ட அவன்,நதிக்கரையில் இருந்த மரங்களில் பூஜைப் பறிக்கத் துவங்கிய போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டான்.அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சஷன் :"நில்..பசியால்  துடித்துக் கொண்டிருக்கின்றேன்.உன்னைத் தின்னப்போகிறேன்" என்றான்,அதைக் கேட்டவன்..சிறிதும் அச்சம் கொள்ளாது"நல்லது..உனக்கு உணவாவதில் எனக்கு மகிழ்ச்சி.ஆனால் 20 ஆண்டுகளாக ஏகாதசி விரதம் இருந்து வருகிறேன்.இன்று ஏகாதசி.கோயிலுக்குச் சென்று வழி பட்டுவிட்டு வருகின்றேன்.நாளைக் காலை உனக்கு உணவாகிறேன்"என உறுதி அளித்தான்.அதைக் கேட்ட பிரம்ம ராட்சஷனும் அவனுக்கு அனுமதி கொடுத்தான்.   கொடியவனும் தன் வார்த்தைத் தவறாது  மறுநாள் ராட்சஷனிடம் சென்றான்.ஆச்சரியம் அடைந்த ராட்சஷன்.."எவ்வளவு நாளாக ஏகாதசி வ...

15 - பிரம்ம புராணம்

 தர்மத்தின் வழி நடந்தால்.. ----------------------------------- பவனா என்ற ஊரில் கௌதமன் என்பவன் வாழ்ந்து வந்தான்.பிறப்பால் பிராம்மணன் ஆனாலும்..அவன் தாயின் தூண்டுதலால எந்தத் தீயக் காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவினைப் பெற்றிருந்தான்.அப்படி இருந்தும் வைசிய குலத்தியச் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான்.மணிகுண்டலன் பெரிய செல்வந்தரின் மகன்.சூழ்ச்சிகாரனாகிய கௌதமன் தோழனிடமிருந்து பொருளைக்கொள்ளையடிக்க நினைத்தான்.அது உள்ளூரிலேயே முடியாத காரியம் என்பதால்..நல்லவன் போல நண்பனைப் பார்த்து "வெளியூர் சென்று நாம் பொருள் ஈட்டி வரலாமே " என்றான்.இதற்கு மணிகுண்டலன்"என் தந்தையிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது.நான் ஏன் வெளியூர் சென்று பொருள் தேட வேண்டும்?"என்றான். "மலை போல செல்வம் தந்தையிடம் இருந்தாலும்..மகன் அதை அனுபவிப்பதில் பெருமை இல்லை.தானாக சம்பாதிப்பதே சிறந்தது" என்றான் கௌதமன் இதனையேற்ற மணிகுண்டலன் பெரும்பொருளுடன் கௌதமனையும் அழைத்துக் கொண்டு வாணிபம் செய்ய வெளியூருக்குச் சென்றான்.கௌதமன் ஏழை.ஆதலால் முதலாகப் போடப்பட்ட பொருள் முழுதும் மணிகுண்டலனையேச் சேரும்....

பிரம்ம புராணம்

 14 - பில்ல தீர்த்தம் வேதா என்றொரு முனிவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.நாள்தோறும் காலையிலிருந்து மாலைவரை சிவனை பிரார்த்தித்துவிட்டு ஊருக்குள் சென்று பிச்சை எடுப்பார்.கிடைத்த உணவில் பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த சிலலிங்கத்துக்குப் படைத்துவிட்டு பிறகு உண்பார்.இதேகாலத்தில் பில்லா என்றொரு வேடன் அந்தக் காட்டில் வசித்து வந்தான்.தினந்தோறும் மிருகங்களை வேட்டையாடி தன்னால் கொல்லப்பட்ட மிருகங்களின் புலாலை சிவலிங்கத்திற்குப் படைத்துவிட்டு எஞ்சியதைத்தான் உண்பான்.இவர்கள் இருவரும் ஒருவரைஒருவர் சந்தித்ததில்லை.ஆனால் வேதாவைப் பொறுத்த மட்டில் தான் வணங்கும் சிவலிங்கத்தைச் சுற்றி இறைச்சித் துண்டுகள் கிடப்பதைப் பார்த்தார்.முதலில் அதைப் பற்றி அவர் கவ்லைப்படவில்லை.என்றாலும் நாளாவட்டத்தில் ஒரு வேறுபாட்டினைக் கண்டார்.தான் படைத்த பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், இறைச்சித் துண்டுகள் சாப்பிட்டுப் போடப்பட்டவைப் போல ஒரு புறமாகக் குவிந்திருப்பதையும் கண்டு ,அதை வேடன் தான் செய்திருப்பான்  என நினைத்தார்.ஆனால், கல்வி அறிவு இல்லா வேடன் தினமும் இறைச்சியைப் படைக்கிறான் என்றால் அது வியப்பாக இருந்தது.யார் அது?...

13 - நாகேஸ்வரனின் கதை

Image
 பிரதிஷ்டனா என்ற நகரை "சுரசேனா" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.நீண்டகாலம் அவனுக்கு மகப்பேறு இல்லை.பல தவங்கள் செய்து இறுதியாக ஒரு குழ்னஹ்தை பிறந்தது.ஆனால்..அக்குழந்தை மனித உருவில் இல்லாமல் ஒரு பாம்பாக இருந்தது.அரசனும், அரசியும் யாருக்கும் சொல்லாமல் அக்குழந்தையை வளர்த்தனர்.திருமணப்பருவம் வந்ததும் அந்த பாம்பு மகன் ,"எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்..இல்லாவிடின் தற்கொலை செய்து கொள்வேன்" என்றான்.அரசர் உடனே வயது முதிர்த்த அமைச்சர் ஒருவரிடம் விவரங்களைக் கூறினார்.அந்த அமைச்சரும்"கீழ்த்திசையை ஆட்சி செய்யும் விஜயன் எனும் அரசனுக்கு யோகவதி என்ற மகள் இருக்கீறாள் அவளை மண்மௌடித்து வைக்கின்றேன்"என்றர.அதன்படியே அம்மன்னனிடம் சென்று பேசினார். பின் ராஜபுத்தர முறையில் மணமகள்..மணமகனின் வாளுக்கு மாலையிட்டாள்.திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்த யோகவதிக்கு , தாதி ஒருத்தி.."இந்த வீட்டில் தேவன் ஒருவன் பாம்பு வடிவில் உள்ளான்.அவனுக்குத்தான் நீ மாலையிட்டுள்ளாய்" என்ராள்.தேவன் என்றதும் மணமகல் மகிழ்ந்து பாம்புக் கணவனைச் சென்று பார்த்தாள்.இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து க...

12- அரிச்சந்திரன் கதை

Image
  இக்சுவாகு பரம்பரையில் வந்த அரிச்சந்திரனுக்கு  மகன் இல்லை.நாரதர், அரிச்சந்திரனைப் பார்த்து ,"நீ கங்கைக் கரை சென்று வருணனைக் குறித்து பிரார்த்தனை செய்தால் உனக்கு மகன் பிறப்பான்'என்று கூறினார்.அவனும் அவ்வாறே செய்ய,அவன் முன் தோன்றிய வருணன்"உனக்கு ஆண் குழந்தை பிறக்குமாறு வரம் தருகிறேன்.ஆனால் என்னைக் குறித்து ஒரு யாகம் செய்து அரிச்சந்திரனும்  அதில் உன் மகனை பலியிடுவதானால் உனக்கு ஆண் மகன் பிறப்பான்"என்றார். அரிச்சந்திரனும் ஒப்புக் கொண்டான்.மகன் பிறந்த ஏழாம் ஆண்டு,பதினாறாம் ஆண்டு முடியும்போதெல்லாம் வருணன் வந்து எப்போது யாகம் எனக் கேட்கும் போதெல்லாம் அரிச்சந்திரன் ஒவ்வொரு சமாதானம் கூறினான்.மகனுக்கு பதினாறு வயது ஆகும் போது வருணன் மறுபடியும் வந்து கேட்டான்.உடன் இருந்தமகன் ரோஹிதன்,"விஷ்ணுவைக் குறித்து யாகம் செய்யப் போகிறேன்.முடிந்தவுடன் உனக்கு பலியாவேன்"என்றான்.யாகம் செய்ய காட்டிற்குப் போனப்போது "அஜிகர்தா" என்ற முனிவரை சந்தித்து தன் வரலாற்றைக் கூறினான்.அது கேட்ட முனிவர், தன் மூன்று பிள்ளைகளில் தனக்கு வேண்டிய முதல் மகனையும், மனைவிக்கு வேண்டிய மூன்றாவது மகனைய...

பிரம்ம புராணம் - 11

Image
  விஸ்வாமித்திரர் தீர்த்தம் ----------------------------------- ஒரு காலத்தில் நாடு முழுதும் பயங்கரமான பஞ்சத்தில் சிக்கியது.விஸ்வாமித்திர முனிவர்,அவர் குடும்பம், சீடர்கள் என அனைவருக்கும் எந்த உணவும் கிடைக்காது வடை வதங்கினர்.விஸ்வாமித்திரர் சீடர்களைப் பார்த்து, எங்கிருந்தேனும், எதையேனும் தேடிச் சென்று கிடைத்ததை கொண்டுவருமாறு கூறினார்.அவர்களும் தேடிச் சென்று எதுவும் கிடைக்காமல்..கடைசியில் இறந்து கிடந்த நாய் ஒன்றின் உடலைக் கொண்டு வந்தனர்.முனிவர், "இதன் புலாலை நன்று கழுவி சுத்தம் செய்து முதலில் தெய்வங்களுக்கும்,பிதுரர்களுக்கும் படையுங்கள்..பின் நாம் உண்போம்" என்றார்.நாயின் புலாலை இறைவனுக்கு படைப்பதா? இதை அறிந்த இந்திரன் வல்லூறு வடிவில் வந்து நாய் உடல் இருந்தக் கிண்ணத்தைத் ட்ஹூக்கிச் சென்றான்.இதை அறிந்த விஸ்வாமித்திரர், இந்திரனை சபிக்க முற்பட,அவரின் சாபத்திற்கு அஞ்சிய இந்திரன்..அந்தக் கொண்ணம் முழுதும் அமிர்தத்தைக் கொண்டு வந்து, "இதனை சாப்பிடுங்கள்"என்றான். அதை மறுத்த முனிவர்,"இந்திரா,உலகமே பட்டினியில் வாடும் போது நான் மட்டும் அமிர்தத்தை உண்ண விரும்பவில்லை.நாய் உடல் உ...

பிரம்ம புராணம் - 10

Image
  கருட தீர்த்தம் ---------------------------- நாகலோகவாசியான அனந்தனுக்கு மணிநாகன் என்றொரு மகன் பிறந்தான்.கருடனைக் கண்டால் பாம்புகளுக்கு நடுக்கம்.இதைஅறிந்த மணிநாகன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான்.தவத்தை மெச்சிய சிவபெருமான்..கருடனால் ஒன்றும் செய்ய முடியாத ஆற்றலை மணிநாகத்திற்குத் தந்தார்.வரபலத்தின் தைரியத்தால் கருடனைக் கண்டு அஞ்சாமல் மணிநாகம் சுற்றித் திரிந்தான்.அவனை எதுவும் செய்ய முடியாது என அறிந்த கருடன் அவனைத் தூக்கிச் சென்று தன் வீட்டில் சிறை வைத்தான்.பல நாட்கள் மணிநாகத்தைக் காணாமையால் நந்திதேவன் சிவனிடம் சென்று முறையிட்டார்..சிவன், "நீ விஷ்ணுவிடம் சென்று மணிநாகனை விடுதலை செய்து கொண்டு வா"என்றார். நந்திதேவன் விஷ்ணுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொல்ல..விஷ்ணு கருடனிடம்..மணிநாகத்தை விடுவிக்கச் சொன்னார்.அதனை செய்ய விரும்பாத கருடன்,"சிவன் முதலானோர் எல்லாம்..தமக்கு உதவி செய்பவர்களுக்கும்..வாகனங்களுக்கும் எவ்வளவோ நன்மை செய்கிறார்கள்.பாராட்டுகிறார்கள்.உங்களது வாகனம் நான்.நீங்கள் அசுரர்களுடன் போராட வேண்டுமானால் என் மீது ஏறிக்கொண்டுதான் போர் செய்கிறீர்கள்.நான் இல்லையேல் உங...

பிரம்ம புராணம் - 9

Image
  மார்க்கண்டேயர் --------------------------- யுக முடிவில் அண்டம் முழுதும் நெருப்பு சூழ்ந்து அனைத்தும் எரிந்து விட்ட நிலையில் மார்க்கண்டேய முனிவர் மட்டும் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்யும் நிலையிலேயே இருந்தார்.யுக நெருப்பு கூட அவரை அண்ட முடியவில்லை.ஆனால் அவர் கண் விழித்த போது அனைத்தும் அழிந் திருப்பதையும் ஒரு ஆலமரம் மட்டும் தனித்து நிற்பதையும் பார்த்தார்.அம்மரத்தினடியில் அமர்ந்து விஷ்ணுவை தியானிப்பதைத் தொடர்ந்தார்.அதன் பயனாக இப்பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை   பன்னிரெண்டு ஆண்டுகாலம் விடாது பெய்தது.இப்போது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம்.நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில் பாலகன் ஒருவன் படுத்திருப்பதைக் கண்டார்.அப்பாலகன் ஆணைப்படி அவனது வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர்.பாலகன் வயிற்றினுள் அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பதைக் கண்டு வெளியே வந்தவர் விஷ்ணுவான அவருடன்.. பல்லாண்டு காலம்  இருந்தார்.அத்தவத்தினை மெச்சிய விஷ்ணு..வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினர.உடன் மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வே...

பிரம்மபுராணம் - 8

Image
பூரி ஜகன்னாதர் ஆலயம் தோன்றிய கதை. ------------------------------------------------------  சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ  தேசத்தை அவந்தி எனும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும்,இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்ரவனாவான்.வெறும் உடல் வன்மையோடு மட்டுமின்றி , வேதங்கள்,சாத்திரங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.போர்க் கருவிகள் அனைத்தையும் கையாளும் பேராற்றல் பெற்றிருந்தான்.சுருங்கச் சொன்னால் அவனுக்கு நிகர் பூவுலகிலோ அல்லது தேவருலகிலோ இல்லை எனலாம்.அப்படியிருந்தும் சிறிதும் அகங்காரமின்றி விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான்.தனக்குள்ள செல்வம்,ஆற்றல், அதிகாரம்,செல்வாக்கு என அனைத்தையும் பயன்படுத்து ஒரு வழி கண்டான். தன வழிபடும் விஷ்ணுவிற்கு அன்றுவரை யாரும் கட்டாத கோயில் ஒன்றினைக் கட்ட தீர்மானித்தான்.அது சிறந்த கோயிலாக அமைவதுடன்..அக்கோயில் அமைகின்ற இடமும் ஈடு இணையற்றதாக இருக்க வேண்டும்  என்று எண்ணினான்.எங்கும் பரவியிருந்த அவன் செல்வாக்குக் காரணமாக எல்லாத் தீர்த்தங்களையும்..இ...

பிரம்ம புராணம் - 7

Image
  மன்னன் யயாதியின் பரம்பரை ----------------------------------------------- மன்னன் நகுஷனின் ஆறு பிள்ளைகளில் ஒருவனாகிய யயாதி ஆட்சி மேற்கொண்டு உலகம் முழுதும் வென்றான்.அவனுடைய ஐந்து மகன்களும் நாட்டை கிழக்கு,மேற்கு,தெற்கு, வடக்கு,நடுப்பகுதி என ஐந்து பகுதிகளாகப் பிரித்து அடசியை ஒப்படைத்து விட்டு, உலகத்தைச் சுற்றிப் பார்க்க நினைத்தான் யயாதி.ஆனால், அதற்கு தன் முதுமை இடையூறாக இருக்கும் என்று கருதியவன், தன் மூத்த பிள்ளையாகிய யது விடம் தன் முதுமையைப் பெற்றுக் கொண்டு அவன் இளமையைத் தருமாறு கேட்டான்.ஆனால் அவனும், மற்ற பிள்ளைகளும் அதற்கு மறுப்பு தெரிவிக்க, கடைசி பிள்ளையான புரு மகிழ்ச்சியுடன் தன் இள்மையைத் தந்தான்.இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி,நீண்ட காலம் உல்கைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவண் இளமையைத் திருப்பித் தந்தான்.புருவின் பரம்பரையில் வந்தவன்  பரதகண்டம் எனப் பெயர் வரக் காரணமான பரதன் ஆவான்.பரதனின் பரம்பரையில் வந்த "குரு" என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்கள் கௌரவர்கள் ஆவார்கள்.மன்னன் குரு ஆட்சி புரிந்த இடமே குருக்ஷேத்திரம் ஆகும். யயாதியின் மகளாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந...

பிரம்ம புராணம் - 5

பிருத்வி எனப் பெயர் வரக் காரணம் -------------------------------- பிரம்மாவால் பங்கிட்டுத் தரப்பட்ட பூமிக்கு அரசனான பிருத்து நன்கு ஆட்சி செய்ததால், பூமியில் வளங்கள் கொழித்தன.பசுக்கள் பாலைப் பொழிந்தன.முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் யாகங்களைச் செய்தனர்.யாகத்தின் முடிவில் "சுதாக்கள்" என்றும் "மகதாக்கள்" என்றும் இரு கூட்டங்கள் தோன்றின.பிருத்துவின் புகழைப் பாடும்படி முனிவர்கள் இவர்களுக்குச் சொன்னார்கள்."ஆனால்..பிருத்து மிகவும் இளையவன்.இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளான்.இவன் இன்னும் ஏதும் வீரச்செயல் செய்யவில்லை.அவனை எப்படி புகழ்வது?" என சுதாக்களும்,மகதாக்களும் கேட்டனர்.முனிவர்கள் எதிகாலத்தை அறியும் ஆற்றலை இவர்களுக்கு வழங்க..உடன் பிருத்துவின் புகழை அவர்கள் பாடினர்.இப்பாடல்கள் எட்டுத் திக்கும் பரவின.இப்படி இருக்கும் பூமியில் வேறொரு மூலையில் இருந்து ஒரு சிலர் பிருத்துவைக் காண வந்தனர்.அவர்கள், பிருத்துவை நோக்கி, "அரசே! உன் புகழ் எட்டுத் திக்கும் பரவி..எதிரொலிக்கிறது.ஆனால், எங்கள் கஷ்டத்தை நீதான் போக்க வேண்டும்.பூமியில் ஒன்றும் விளைவதில்லை.வளமின்மையால் பசுக்கள் ப...

பிரம்ம புராணம் - 6

Image
  வைவஸ்தமனு பரம்பரை ----------------------------------- சூரியனுக்கும், விஸ்வகர்மாவின் மகளுக்கும் பிறந்த முதல் குழந்தை வைவஸ்தமனு எனப்படும்.இந்த மனுவிற்கு நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்ததால் அவன் ஒரு பெரிய யாகத்தை நடத்தினான்.அ தன் பலனாக இக்சுவாகு முதலில்  ஒன்பது பேர் மைந்தர்களாகப் பிறந்தனர். பின் நூறு மைந்தர்கள் பிறந்தனர்.ஒரு யாகம் நடத்துவதற்காக காட்டில் சென்று ஒரு மிருகத்தை வேட்டையாடி அதன் உடலைக் கொண்டு வருமாறு இக்சுவாகு முதல் மைந்தனான விருக்சியை ஏவினான்.காடு சென்று வேட்டையாடிய விருக்சி ,அதிகம் பசித்ததால் அவ்வேட்டை மிருகத்தின் ஒரு பகுதியைத் தின்று விட்டான்.எச்சிலான பாகத்தைக் கொண்டு வந்ததால் நாடு கடத்தப் பட்டான்.இக்சுவாகு இறந்த பின விருக்சி மீண்டும் நாட்டிற்கு வந்து ஆட்சி செய்யலானான்.இவன் ஆட்சி செய்த பகுதிக்கு அயோத்தி என்று பெயர்.விருக்சியின் மகனான காகுஸ்தன் பரம்பரையில் தோன்றியவனே ராமன் ஆவான். திரிசங்குவின் கதை ------------------------------ துந்துபி என்ற அசுரனனைக் கொன்ற குபலஷ்வாவின் மைந்தர்களில் ஒருவனாகி திருதஷ்வாவின் பரம்பரையில் வந்த "திரயருனி" முறையான ஆட்சியை  ...

பிரம்மபுராணம் - 4

Image
  அர்ஷிதா என்ன பெண்ணிற்கு கந்தர்வர்கள் மக்களாகத் தோன்றினர்.சுரசா என்பவளுக்கு பாம்புகள் பிறந்தன.காஷா என்பவளுக்கு குபேரனுக்கு நண்பர்களாகிய யட்சர்கள் தோன்றினர்.சுரபியின் வயிற்றில் பசுக்களும்,எருமைகளும் தோன்றின.வினதாவிற்குப் பறவைகளின் அரசனாகிய கருடனும்,அருணையும் மக்களாகத் தோன்றினர்.தாமராவின் வழியில் ஆந்தைகள்,வல்லூறுகள்,காகங்கள்,குதிரைகள், கழுதைகள்,ஒட்டகங்கள் தோன்றின.குரோதவஷாவிற்கு 14000 பாம்புகள் பிறந்தன.இலா என்பவள் வயிற்றில் மரங்கள்,செடி கொடிகள் தோன்றின.கத்ரு என்பவள் வயிற்றில் அனந்தன்,வாசுகி,தட்சகன்,நகுசன் முதலிய நாகங்கள் தோன்றின.முனி என்ற பெண்ணிற்கு அப்சரஸ்கள் பெண்களாகத் தோன்றினர். அதிதியின் பிள்ளைகளாகிய தேவர்களும், திதியின் பிள்ளைகளாகிய அசுரர்களும் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருந்தனர்.பல அசுரரகள் தேவர்கள் தலைவனாகிய இந்திரனால் கொல்லப்பட்டனர்.இதனை அறிந்த திதி இந்திரனைக் கொல்ல தனக்கு ஒரு பிள்ளை வேண்டுமென வேண்டினாள்.அப்படி ஒரு பிள்ளை வேண்டுமானால் நூறாண்டுகள் அவள் கருவில் அப்பிள்ளை இருக்கும் என்றும்..அந்த நூறு ஆண்டுகளும் மிகக் க்டுமையான விரதங்கள் அனுஷ்டித்து கடுந்தவம் புரிய வேண்டும் என்றும் ...

பிரம்ம புராணம் - 3

Image
  உலகின் அழிவைக் கண்டு கலங்கிய சந்திரன் ஒரு அழகிய பெண்ணுடன் பிரசேத சகோதரர்களிடம் வந்து, "நீங்கள் சினம் கொள்வதில் நியாயமில்லை.உலகை ஆள வேண்டிய நீங்கள் அதைத் துறந்து விட்டதால்,இந்நிலை உருவாயிற்று.இப்போது உலகை ஆள ஒரு மன்னன் தேவை.இந்தப் பெண்ணை மணந்து அவள் மூலம் பிறக்கும் மகனை அரசனாக்கினால் உலகம் செழிக்கும்.நீங்களும் இடையூறு இல்லாமல் தவத்தை மேற் கொள்ளலாம்  " என்று கூறினார்.பிரசேதர்கள் அதற்கு உடன்பட்டு அவளை மணந்து தட்சன் எனும் பிள்ளையைப் பெற்றனர்.அவனே உலகுக்கு அரசனானான்.மக்களுக்கு "பிரஜை" என்ற பெயருண்டு.அவர்களுக்கு அரசனான தட்சன் பிரஜாபதி என அழைக்கப் பட்டான். என்று உரோமஹர்ஷனர் சொல்லிக் கொண்டிருந்த போது..முனிவர்கள் குறுக்கிட்டனர்.. "பெருமுனிவரே! தட்சன் என்பவன் பிரம்மனின் கால் கட்டை விரலில் இருந்து தோன்றியவன் ..என்றல்லவா..கேள்விப் பட்டோம். ஆனால், பிரசேதர்களின் மக்ன தட்சன் என்றால்..குழப்பமாய் இருக்கின்றதே!" என்றனர். "இதில் குழப்பம் ஏதுமில்லை.எத்தனையோ தட்சன்கள் தோன்றியுள்ளனர்...அவர்களில் ஒரு தட்சன் நான்முகனின் கட்டைவிரலில் இருந்து தோன்றினான்.இந்த தட்சன் பிரசேதர்க...

பிரம்ம புராணம் - 2

 நைமிசாரண்ய வனம் மிகவும் அழகு வாய்ந்த பகுதியாகும்.பூத்துக் குலுங்கும் மரங்கள், செடி, கொடிகள், பறந்து திரியும் வித விதமான பறவைகள், ஓடித் திரியும் விலங்குகள், ஆங்காங்கு சல சலத்து ஓடும் ஓடைகள் ஆகிய பகுதிகள் நிறைந்துள்ள பகுதியான நைமிசாரண்யம்,யாருக்கும் உணவுப் பஞ்சமில்லாமல் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்கும் சிறப்புடையது.இக்காரணங்களால் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளும் இவ்வனத்தில் வசித்து வந்தனர்.இயற்கை வளங்கள் நிரம்பியிருந்ததால் பல வேள்விகளும்,யாகங்களும் அங்கு நடைபெற்றன. ஒருமுறை பல முனிவர்கள் கூடி ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தினர்.இங்கே உள்ள ரிஷிகள்,முனிவர்களும் போக இந்த வேள்வியினால் பல இடங்களிலிருந்தும் பல முனிவ ர்கள் வந்திருந்தனர்.அவருக்கு வேதவியாசரின் சீடராகிய உரோமஹர்ஷனரும் ஒருவர்.இப்பெயரே மருவி லோமஷனர் என வழங்கப் பெற்றது.பல புராணங்கள் வகுத்த வேதவியாசரின் சீடர் என்பதால் புராணங்களையும் அவற்றின் கதைகளையும் உரோமஹர்ஷனர் தன் குரு மூலம் கேட்டு அறிந்திருந்தார். உரோமஹர்ஷனரைப் பார்த்ததும் , வேள்விக்கு வந்த முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, வேத வியாசரிடம் கற்ற புராணங்களைப் பற்றித் தங்களுக்கு...

பிரம்ம புராணம்

Image
(பிரம்மன்,பிரம்மம் இரண்டு பெயர்களும் முற்றிலும் வெவ்வேறானவை.பிரம்மம் என்பது பரபிரம்மத்தைக் குறிக்கும் சொல்.பிரம்மன் என்பது மும்மூர்த்திகளில் ஒருவராகிய நான் முகனைக் குறிக்கும்.இப்புராணம் பிரமன்+புராணம்=பிரம்ம புராணம் என்று பெயர் பெற்றுள்ளது.இதுகுறிப்பிடுவது பிரம்மனையே என அறிந்து கொள்ளவும்)  பிரம்ம புராணம் என கூறப்படும் இப்புராணம் ஆதி புராணம் என்று சொல்லப்படும். இதன் மூலம் கிடைக்கவில்லை.கிடைத்துள்ள பகுதி மூலத்துடன் எவ்வளவு தொடர்புடையது என சொல்ல முடியாது.ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுள்ள பிரம்ம புராணத்தை உப புராணங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.இந்த பிரம்ம புராணம் பரப்பிரம்மத்தை விரிவாக விளக்கத் தொடங்குகிறது.தைத்திரிய உபநிடத்தில் பிருகுவல்லி கூறும் பரபிரம்மம் பற்றிய இலக்கணத்தை ஒற்றியே இந்த பிரம்ம புராணம் பேசுகிறது. "எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து இந்த உயிர்கள் தோன்றுகின்றனவோ..எந்தப் பரப்பிரம்மத்தின் தயவால் இந்த உயிர்கள் உலகிடை நிலைபெறுகின்றனவோ..அந்த பரப்பிரம்மத்தினிடையே இந்த உயிர்கள் அனைத்தும் சென்று அடைகின்றன" என்பதே பிருகுவல்லி கூறும் பரப்பிரம்பத்தின் இலக்கணமாகும். "சத்த...